மேலும் அறிய

இளம் பெண்களுக்கு ஆபத்தானது இன்ஸ்டாகிராம்.. ஒப்புக்கொண்ட பேஸ்புக்!

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் டீனேஜ் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தங்களுக்கு பயமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுவதாக தெரிவித்து உள்ளனர்

கடந்த 3 ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் காரணமாக கோடிக்கணக்கான இளம் பயனாளர்களின் மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நடத்திய ஆய்வு முடிவிலேயே தெரியவந்து உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் தெரிவித்து உள்ளது. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான பேஸ்புக்கின் ஆவணங்களில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் குறிப்பிட்டு உள்ளது.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலி பெரும் அளவிலான பதின் பருவ இளம் பெண்களுக்கு ஆபத்தானதாக மாறி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மூன்றில் ஒரு இளம் பெண் தனது உடல் குறித்து கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை பயன்படுத்தும் இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தங்களுக்கு பயமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

இளம் பெண்களுக்கு ஆபத்தானது இன்ஸ்டாகிராம்.. ஒப்புக்கொண்ட பேஸ்புக்!

இத்தகைய பிரச்சனை குறித்து அறிந்தும் பேஸ்புக் நிறுவனம் அதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குறைவான அளவிலான முயற்சி செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பேஸ்புக் பைல்ஸ் என்ற பெயரில் வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் வெளியிட்டுள்ள பதிவு பேஸ்புக் நிறுவனத்துக்கு தலைவலியாக மாறி உள்ளது.

பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப்புக்கு பிறகு உலகளவில் அதிகம் பிரபலமான சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இதுகுறித்து பலரும் அறிந்திராத நேரத்திலேயே "இன்ஸ்டாகிராமத்தில் வாடி வாழலாம்" என தளபதி பாடிய மறுநொடியே அதில் வெறித்தனமாக கணக்கு தொடங்கி கெத்து காட்டினர் விஜய் ரசிகர்கள்.

புகைப்பட கலைஞர்கள், பிரியர்களை ஈர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட இன்ஸ்டாகிராமில் தரமான புகைப்படங்களுக்கு கேரண்டி. ஏராளமான பில்டர்களையும் வசதிகளையும் கொடுத்து புகைப்பட பிரியர்களை தன் வசப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.

இதை பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் வாங்கிய பிறகு வேற லெவல் ஹிட் ஆனது. 80ஸ் கிட்ஸ்களுக்கு 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு பேஸ்புக் போல், இப்போது உள்ள 2K கிட்ஸ்களுக்கு இன்ஸ்டாகிராம் தான் ஆஸ்தான சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது.

இளம் பெண்களுக்கு ஆபத்தானது இன்ஸ்டாகிராம்.. ஒப்புக்கொண்ட பேஸ்புக்!

தற்போது இதை பயன்படுத்தி வருபவர்கள் எண்ணிக்கை 1.214 பில்லியன். அதாவது 121 கோடி. இந்த அளவுக்கு பிரபலமான இன்ஸ்டாகிராமில் பிராப்ளங்களும் அதிகம். ஆம், நிதி மோசடி தொடங்கி பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் வரை ஏராளமான குற்றங்கள் இன்ஸ்டாகிராமத்தில் நடக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்ட ரீல்ஸ் என்ற வீடியோ வசதி மூலம், INFLUENCERS என கூறிக்கொள்ளும் பலர் போலியான, தரமற்ற நிறுவனங்களை, பொருட்களை விளம்பரம் செய்வது வருகின்றனர்.

அதுபோல் டிக்டாக் மூலம் அரங்கேறிய அனைத்து குற்றங்களும், இன்ஸ்டாகிராமத்துக்கு ரீல்ஸ் வழியாக வந்தடைய தொடங்கி இருக்கிறது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் ஆபாச வீடியோக்களை சிறுவர்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget