இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Realme 8 5G.. பலரும் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் என்ன?
Realme 8 5G மாடலை இந்திய சந்தையில் ஏப்ரல் 21-ஆம் தேதி அறிமுகம் செய்யவிருக்கிறது Realme நிறுவனம்.

Realme நிறுவனம் தனது புதிய Realme 8G மாடலை இந்த மாதம் 21-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. மேலும் இந்திய அளவில் MediaTek MT6833 Dimensity 700 5G என்ற சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுவென்ற தகவலும் வெளியாகி உள்ளது. MediaTek MT6833 Dimensity 700 5G குறித்து ஏற்கனவே ரியல்மி நிறுவனம் அதிகார்வப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளபோதும், அந்த சிப்செட் ரியல்மி 8 5ஜியில் உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
We are pioneers of presenting Trendsetting Tech in the industry & @MediaTekIndia has been a partner in achieving a lot of these milestones.
We are back again with another ‘1st’ as we become the 1st brand in India to offer the MediaTek Dimensity 700 5G Processor in our smartphone. pic.twitter.com/zCuk7CgUzk— realme (@realmeIndia) April 14, 2021
ஏப்ரல் 21-ஆம் தேதி வெளியாகும் என்று நம்பப்படும் இந்த ஸ்மார்ட்ஃபோன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி UI 2.0 OSவுடன் வெளியாகவுள்ளது. 48 மெகாபிக்செல் உள்ளிட்ட மூன்று மெயின் கேமராக்களும் 8 மெகா பிக்செல் முகப்பு கேமராவும் இதில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகும் பல ஸ்மார்ட்ஃபோன்களில் பெரிய அளவில் ஹெட்ஃபோன் வசதிகள் கொடுக்கப்படாத நிலையில் ரியல்மி 8 5ஜி மாடலில் 3.5mm ஹெட் போன் ஜாக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் வசதி போனின் பக்கவாட்டில் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ஃபோனின் விலையும் தற்போதுவரை வெளியிடப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

