மேலும் அறிய

smart watch without mobile | மொபைலே வேண்டாம்.. ஸ்மார்ட் வாட்சே போதும்... அசத்தும் சாம்சங்!

ஆனால் மொபைலுடன் இணைத்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் சில வசதிகள் இம்முறை பயன்படுத்தலின் பொழுது கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு புரட்சியாக பார்க்கப்படுவது ஸ்மார்ட் வாட்ச். பல முன்னணி மற்றும் பிரபலமான மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய் பயனாளர்களை கவரும் வகையில் பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்கள் சந்தையில் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.  ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்த ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்று. ஒரே நிறுவனத்திலான ஸ்மார்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்சினை பயன்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சூழலில் பிரபல சாம்சங் நிறுவனம் தான் அறிமுகப்பட்டுத்தியுள்ள இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சுகளை மொபைல் இல்லாமலும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.


smart watch without mobile | மொபைலே வேண்டாம்.. ஸ்மார்ட் வாட்சே போதும்... அசத்தும் சாம்சங்!
சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் Samsung Galaxy Watch 4  மற்றும்  Samsung Galaxy Watch 4 Classic  என்னும் இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் சற்று தாமதமாக அறிமுகமானாலும் , மேற்கண்ட ஸ்மாட் வாட்சுகள் Bluetooth-only மற்றும் LTE வசதி என்ற வசதிகளுடன் களமிறங்கியது. இதில்  Bluetooth-only என்ற வசதியை பயன்படுத்துவதற்கு மொபைலின் ஸ்மார்ட் வாட்ச் செயலி தேவைப்படுகிறது.  LTE வசதி மூலம் ஸ்மார்ட் வாட்ச் தனித்து செயல்பட முடியும். சரி எப்படி மொபைல் இல்லாமல் ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம். 


முதல் முறை இந்த வசதியின் மூலம்  Samsung Galaxy Watch 4 மற்றும்  Samsung Galaxy Watch 4 Classic வாட்சினை இயக்க விரும்பினால் , turn on செய்ய வேண்டும் அல்லது முன்பே வாட்சினை பயன்படுத்துபவராக இருந்தால் reset  செய்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு தோன்றும் கேள்விக்குறி (?) ஐகானை  கிளிக் செய்து , பிறகு ‘tap here'  என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு அறிவிப்பு ஒன்று தோன்றும். அதனை கவனமாக படித்து பார்த்துவிட்டு  ‘Continue' என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தோன்றும் அதனை படித்து பாருங்கள்..அதனை ஏற்றுக்கொண்டால் கீழே தோன்றும்  ‘Next'  என்னும்  வசதியை கிளிக் செய்து முன்னேறுங்கள்.


smart watch without mobile | மொபைலே வேண்டாம்.. ஸ்மார்ட் வாட்சே போதும்... அசத்தும் சாம்சங்!
இப்போது உங்களிடம் சாம்சங் கணக்கிற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் இருந்தால் அதனை பயன்படுத்துங்கள் , இல்லை என்றால்  Skip என்னும் வசதியை தேர்வு செய்துக்கொள்ளலாம்.

அதன் பிறகு நீங்கள் இருக்கும் நாட்டின் நேரம் குறித்த விவரங்களை கொடுக்கப்பட்ட வசதியில் set  செய்துக்கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளை திரும்ப பெறுவதற்கான PIN  ஒன்றை உருவாக்க கேட்கும். உங்கள் விருப்பப்படி அதையும் உருவாக்குங்கள்.

இப்போது உங்கள் வாட்ச் மொபைல் இல்லாமல் செயல்பட தயாராகிவிடும் . பின்னர் நீங்கள் மொபைலுடன் இணைக்க விரும்பினால் Settings > Connect to phone > ✔  என்னும் வசதிக்கு செல்லுங்கள். பின்னர் ஏற்கனவே பதிவு செய்த நான்கு இலக்க  PIN நம்பரை பதிவு செய்து மொபைலுடன் பயன்படுத்த தொடங்கலாம்.


மொபைல் இல்லாமல்   Samsung Galaxy Watch 4  மற்றும்  Samsung Galaxy Watch 4 Classic  வாட்சினை உடற்பயிற்சி செய்தல், மலையேறுதல் போன்ற வெளிப்புற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் மொபைலுடன் இணைத்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் சில வசதிகள் இம்முறை பயன்படுத்தலின் பொழுது கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget