Google Play Pass: விளம்பரங்கள் இல்லாமல் ஆப்ஸ், கேம்ஸ் வேணுமா? காண உதவும் ப்ளே பாஸ்.. பெறுவது எப்படி?
இந்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது கூகுள் ப்ளே பாஸ். இதன்மூலமாக ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் எந்த விளம்பரமும் இல்லாமல் செயலிகளையும், கேம்ஸ்களையும் பயன்படுத்த முடியும்.
இந்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது கூகுள் ப்ளே பாஸ். இதன்மூலமாக ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் எந்த விளம்பரமும் இல்லாமல் செயலிகளையும், கேம்ஸ்களையும் பயன்படுத்த முடியும். விளம்பரம் மட்டுமின்றி, செயலிகளுக்குள் மேற்கொள்ளப்படும் பர்சேஸ்கள் முதலானவை இல்லாமலும் பயன்படுத்தலாம். இதன் தொடக்க விலை மாதந்தோறும் 99 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ளே பாஸ் வாங்குபவர்களுக்குப் பிரத்யேகமாக கூகுள் ப்ளே சார்பில் செயலிகள் வழங்கப்படுகின்றன. கூகுள் ஃபேமிலி க்ரூப் பயன்படுத்துபவர்கள் தங்கள் ப்ளே பாஸ் சப்ஸ்கிருப்ஷனைத் தங்கள் குடும்பத்தினர் ஐவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
மாதம் தோறும் 99 ரூபாய் செலுத்தும் வசதியும், ஆண்டுக்கு 889 ரூபாய் செலுத்தும் வசதியும் கூகுள் ப்ளே பாஸ் மூலமாக ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஒரு மாத ட்ரையலாகவும் இந்த சேவை வழங்கப்படுகிறது. அதே போல, ப்ரீபெய்ட் முறையில் 109 ரூபாய்க்கு ஒரு மாத சப்ஸ்கிருப்ஷன் கிடைக்கிறது.
கூகுள் ப்ளே பாஸ் என்ற புதிய திட்டம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் அனைத்து பயனாளர்களுக்கும் இன்னும் முழுமையாக இது வழங்கப்படவில்லை. அடுத்த வாரம் முதல் ப்ளே பாஸ் அனைவருக்கும் முழுமையாக கிடைக்கும் என கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. Android 4.4 ஓ.எஸ் பயன்படுத்தப்படும் மாடல்களுக்குப் பிறகு வெளியான மாடல்கள், Google Play store app version 16.6.25 முதலானவை இது இயங்குவதற்கு அடிப்படை தேவை. மேலும், இந்த சேவையைப் பயன்படுத்துவதற்காக கட்டண முறையில் சைன் அப் செய்ய வேண்டும்.
உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோனில் ப்ளே பாஸ் பெறுவது எப்படி?
1. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் ப்ளே சென்று, வலது பக்கத்தின் மேல்புறத்தில் இருக்கும் ப்ரொஃபைல் ஐகானை அழுத்தவும்.
2. Play Pass என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ப்ளே பாஸ் சேவையைப் பயன்படுத்துவதற்கான அறிமுகத்தை வாசிக்கவும். மேலும், அதன் கட்டணத் திட்டமும் உங்களுக்குக் காட்டப்படும்.
4. மொத்த தொகையை சரிபார்த்து. சேவையின் விதிமுறைகளைப் படித்த பிறகு, Subscribe என்று அழுத்த வேண்டும். உங்கள் அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.
5. உங்கள் கூகுள் அக்கவுண்டின் பாஸ்வேர்ட் செலுத்தி, Verify என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
6. உங்களுக்கு இலவசமாக ஒரு மாத ட்ரையல் வழங்கப்படும். கூகுள் ப்ளே பாஸ் சப்ஸ்க்ரைப் செய்தவர்களுக்கு வழங்கப்படும் செயலிகள், கேம்கள் ஆகியவற்றின் பட்டியல் உங்களுக்குக் காட்டப்படும்.
சுமார் 59 நாடுகளில் இருந்து டெவெலப்பர்கள் மூலமாக 41 பிரிவுகளின் கீழ் சுமார் ஆயிரக்கணக்கான டைட்டில்களை வழங்குகிறது கூகுள். இந்தியாவில் இதில் 15 செயலிகள் கிடைக்கின்றன. காலப்போக்கில் இந்தப் பட்டியல் மாற்றப்பட்டு, புதியவை தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன.