(Source: ECI/ABP News/ABP Majha)
இனி எல்லா வேலையும் இதுலயே செய்யலாம்! Google BARD AI - ஐ பயன்படுத்துவது எப்படி?
How to Use Google BARD AI: Bard AI இடம் Google என்ற மிகப்பெரிய தகவல் குவியல் இருப்பதால், அதன் உண்மைத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால் சாட் போட்டை விட சிறந்ததாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
Google Bard AI Chatbot: நவீன உலகின் சமீபத்திய சென்சேஷன் செயற்கை நுண்ணறிவுதான்(AI). அதிகரித்து வரும் நிறுவனங்கள் பல தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் AI ஐ செயல்படுத்துகின்றன. AI தொழில்நுட்பம் எனப்படுவது எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒரு மனிதனை போல சிந்தித்து வேலையை செய்வது, அதாவது வழக்கமான மனித செயல்முறைகளை தானியங்கிப்படுத்துதல். முடிவெடுப்பதை மேம்படுத்தவும், சுகாதாரம், வங்கி, சில்லறை வணிகம் மற்றும் போக்குவரத்து போன்ற பகுதிகளில் பயனர் அனுபவங்களை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் அறிமுகமான GOOGLE BARD AI:
2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில், OpenAI ஆனது ChatGPT எனப்படும் மொழி அடிப்படையிலான AI மாடலை வெளியிட்டது. இது டிஜிட்டல் உலகத்தில் பெறும் புரட்சியை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்குப் பிறகு, இந்த ஃபீல்டில் மிகப்பெரிய நிறுவனமான கூகிள் தனது சொந்த மொழி மாடலை விரைவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஒருவழியாக இப்போது அது பயன்பாட்டுக்கு, இந்தியா உட்பட 180 நாடுகளில் வந்துவிட்டது.
கூகுள் பார்ட் என்றால் என்ன?
கூகுள் பார்ட் என்பது கூகுள் உருவாக்கிய உரையாடல் AI ஆகும். இது LaMDA (உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாடல்) மூலம் இயக்கப்படுகிறது. AI சாட்போட் பார்ட் மூலம், கூகிள் அதன் மொழி மாதிரிகளின் வலிமை மற்றும் தகவல்கள், கண்டுபிடிப்பு ஆகியவற்றுடன் மனித அறிவின் ஆழத்தை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் உமன்மையான மற்றும் துல்லியமான பதில்களை கூகுளால் இணையத்தில் கிடைக்கும் ஏராளமான தரவுகளை பயன்படுத்தி பார்டால் வழங்க முடியும்.
ALSO READ | இந்தியா உள்பட 180 நாடுகளில் அறிமுகமானது Google BARD AI..! அப்படி என்றால் என்ன?
Bard AI ஐ எவ்வாறு பயன்படுத்துவது?
- https://bard.google.com/ என்ற AI மாடலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- திரையின் கீழ் வலதுபுறத்தில் காணப்படும் "try bard" பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்கள் Google அக்கவுண்ட் கொண்டு Bard இல் பதிவு செய்யவும்.
- AI மாடலின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்கவும்.
- இப்போது நீங்கள் பார்ட் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தயாராகிவிட்டீர்கள்.
- கவிதைகள் எழுதுதல், இணையத்தில் தேடுதல், பொழுதுபோக்கைக் கண்டறிதல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு Google Bardஐப் பயன்படுத்தலாம்.
ChatGPT ஐ விட Google Bard சிறந்ததா?
சாட் GPT ஆனது 2021 வரையிலான நிகழ்வுகளை மட்டுமே கொண்டுள்ளது. மறுபுறம், Google Bard சமீபத்திய தரவுகளைக் கொண்டுள்ளது. அதோடு மிகவும் துல்லியமான தகவல்களையும் வழங்கும் என நம்பப்படுகிறது. கூடுதலாக, Bard AI இடம் Google என்ற மிகப்பெரிய தகவல் குவியல் இருப்பதால், அதன் உண்மைத்தன்மை அதிகமாக இருக்கும்.
Bard மற்றும் GPT போன்ற மொழி அடிப்படையிலான AI மாடல்கள் முதல் DALL-E மற்றும் Midjourney போன்ற AI ஆர்ட் ஜெனரேட்டர்கள் வரை, நிறைய மாடல்கள் வந்துள்ளன. மேலும் திறன் மற்றும் துல்லியத்தை மேம்படுத்த, சுகாதாரம் முதல் நிதி வரை பல்வேறு தொழில்களில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறும்போது, டிஜிட்டல் உலகத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் இன்னும் மேம்பட்ட மாதிரிகள் வெளிப்பட்டு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.