Whatsapp Web யூஸ் பண்றீங்களா? QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியவில்லையா? இத படிங்க..
வாட்சாப் வெப் பயன்படுத்துவதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியவில்லையா? இதோ அதனை சரிசெய்வதற்கான சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளோம்...
வாட்சாப் செயலியைக் கணினியில் பயன்படுத்துவதற்காக QR குறியீட்டை உங்கள் ஃபோன் மூலமாக ஸ்கேன் செய்ய வேண்டும். சில நேரங்கள் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடிவதில்லை என்பது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தலாம்.
வாட்சாப் வெப் பயன்படுத்துவதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியவில்லையா? இதோ அதனை சரிசெய்வதற்கான சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளோம்...
1. ஹார்ட்வேர் பிரச்னைகளை சரி செய்யவும்
QR குறியீடுகள் கறுப்பு, வெள்ளை சதுரங்களால் உருவாக்கப்பட்டவை. எனவே உங்கள் ஸ்க்ரீனில் தூசி இருந்தாலோ, உங்கள் ஃபோனின் கேமராவில் தூசி இருந்தாலோ அவற்றால் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாது. எனவே உங்கள் கேட்ஜெட்களை தூசியின்றி சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாக எளிதாக QR குறியீட்டை ஸ்கேன் செய்து வாட்சா வெப் பயன்படுத்தலாம்.
2. வாட்சாப் தளத்தில் இருந்து ஏற்படும் பிரச்னைகளை சரி செய்யவும்
வாட்சாப் தளம் இயங்காமல் இருக்கும் போது இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம். எனவே வாட்சாப் தளம் சரிவர செயல்படுகிறதா என்பதைப் பிறரோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளவும். வாட்சாப் வெப் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தால், அதனை வாட்சாப் ஊழியர்கள் சரிசெய்யும் வரை காத்திருக்க வேண்டும். பிறருக்கு இதுபோன்ற பிரச்னை எதுவும் இல்லாமல், உங்களுக்கு மட்டும் இருந்தால் வேறு வழிகளின் மூலம் வாட்சாப் வெப் பயன்படுத்தலாம்.
3. இணையத் தொடர்பை சரி பார்க்கவும்
வாட்சாப் மொபைல் செயலியையும், வாட்சாப் வெப்பையும் பயன்படுத்துவதற்கு நன்கு செயல்படும் இணையத் தொடர்பு தேவை. உங்கள் ஸ்மார்ட்ஃபோன், கணினி இரண்டுமே இணையத்தில் கனெக்ட் செய்யப்படவில்லை என்றாலோ, உங்கள் இணையத்தின் வேகம் மிகக் குறைவாக இருந்தாலோ, உங்களால் வாட்சாப் வெப்பை பயன்படுத்த முடியாது. எனவே இதனை முதலில் சரிசெய்ய வேண்டும்.
4. வாட்சாப் வெப், வாட்சாப் மொபைல் ஆகியவற்றை மீண்டும் இயக்கவும்.
இரு கேட்ஜெட்களில் ஏற்படும் பிரச்னைகளையும் சரிசெய்ய, இரண்டிலும் வாட்சாப் பயன்படுத்துவதில் இருந்து வெளியேறி, முதலில் இருந்து இணைக்க முயலவும். கணினியில் வாட்சாப் வெப் பயன்படுத்தும் பிரவுசரில் பிரச்னைகளை சரிசெய்யவும். பிரவுசர், மொபைல் ஃபோன் ஆகியவற்றில் உள்ள cache அழிக்கப்படுவதும், வாட்சாப்பை இணைப்பதற்கு உதவிகரமாக அமையும். மேலும் உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் ஏற்கனவே வாட்சாப் வெப் பயன்படுத்த இணைக்கக்கப்பட்டிருப்பதையும், கணினியில் பிற வாட்சாப் கணக்குகள் பயன்படுத்தபட்டிருந்தால் அவற்றையும் நீக்குவது நீங்கள் கனெக்ட் செய்ய உதவும்.
தொடர்ந்து இதே பிரச்னைகள் நீடிக்குமாயின், வாட்சாப் தளத்தைத் தொடர்பு கொள்ளலாம்..
வாட்சாப் சப்போர்ட் மூலம் உதவி பெறுவது எப்படி?
1. வாட்சாப் செயலியைத் திறக்கவும்.
2. மேல்பக்கத்தின் வலது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.
3. Settings > Help > Contact Us என வரிசையாக செல்லவும்.
4. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் உங்கள் பிரச்னைகளையும், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மாடல் எண்ணையும் பதிவிட வேண்டும்.
5. Next என்ற பட்டனை அழுத்தி, வாட்சாப் சப்போர்ட் தளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.