SIM Swapping : அதிகரிக்கும் சிம் ஸ்வாப்பிங் மோசடி ! பாதுகாப்பாக இருப்பது எப்படி ?
அந்த சிம் செயழிலந்ததும் அருகில் உள்ள மொபைல் ஆப்பரேட்டரிஸிடம் சென்று சிம் கார்ட் தொலைந்துவிட்டது என கூறி , அதே எண்ணில் போலி சிம் கார்டினை பெற்று வங்கி கணக்குகளை தங்கள் வசமாக்கிக்கொள்கின்றனர்.
சிம் ஸ்வாப்பிங் :
தற்போது இந்தியாவில் அதிகம் பழக்கப்பட்ட மோசடியாகிவிட்டது சிம் ஸ்வாப்பிங். சிம் ஸ்வாப்பிங் என்பது உங்களது மொபைல் எண்ணை வேறு ஒருவர் பயன்படுத்துவது அதாவது உங்களின் மொபைல் எண்ணிலேயே போலி சிம் கார்டினை பெறுவது.. அது எப்படி உங்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியும் என கேட்கலாம். முடியும்!.. மொபைல் சேவை வழங்குநரின் உதவியுடன், அதே எண்ணில் புதிய சிம் கார்டை பெற்று , உங்களது வங்கிக்கணக்குகளை அவர்களால் சூரையாட முடியும்!.
View this post on Instagram
எப்படி செயல்படுகிறது இந்த கும்பல் :
கிரிமினல் ஃபிஷிங், விஷிங், ஸ்மிஷிங் போன்ற தொழில்நுட்ப வசதிகள் மூலமாக வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எடுக்கின்றனர்.அந்த எண்ணை ஹேக் செய்து செயழிலக்க செய்கின்றனர். அந்த சிம் செயழிலந்ததும் அருகில் உள்ள மொபைல் ஆப்பரேட்டரிஸிடம் சென்று சிம் கார்ட் தொலைந்துவிட்டது என கூறி , அதே எண்ணில் போலி சிம் கார்டினை பெற்று வங்கி கணக்குகளை தங்கள் வசமாக்கிக்கொள்கின்றனர்.
எப்படி தடுப்பது ?
View this post on Instagram
- வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்ட உங்களது மொபைல் எண் திடீரென செயலிழந்தால் , சம்மந்தப்பட்ட மொபைல் ஆப்பரேட்டரை உடனடியாக தொடர்புக்கொண்டு பிரச்சனையை தெரியப்படுத்துங்கள்.
- தனிப்பட்ட தகவல்களை இணையதளத்திற்கு வழங்கும்போது, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு வலைத்தளத்திலும் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தும் முன் கவனமாக இருக்க வேண்டும்.
- தனிப்பட்ட தகவல்களை பதிவிடும் முன்பு இணையதளத்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதிகாப்பை உறுதி செய்வது அவசியம்.
- வங்கிக் கணக்கின் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுவது நல்லது. இது குறித்த அலர்ட்டினை சில வங்கிகள் செய்து வருகின்றன.
- மெயிலிலும் அலர்ட் வைத்திருப்பது நல்லது. ஏதேனும் பணபைவர்த்தனைகள் செய்யப்பட்டால் அதன் அலர்ட்ஸ்கள் உங்களுக்கு வரும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்