EB Bill | மின்கட்டண ரீடிங்; வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டுமா? இதை செய்தால் போதும்!
மின்கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து மின்வாரியத்திடம் தெரிவித்து மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மின்சாரக் கட்டணத்தை குறிக்க ஊழியர்கள் வீடுகளுக்கு வரமுடியாத சூழல் உள்ளது. இதனால் பழைய மின் கட்டணத்தையே செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் இது மக்களிடையே சலசலப்பை உண்டாக்கியது. இதனால் அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து மின்வாரியத்திடம் தெரிவித்து மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
எப்படி?
மே மாதத்திற்கு மட்டும் பொதுமக்களே மின்கட்டணத்தை கணக்கீடு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின் மீட்டரில் உள்ள கணக்கை செல்ஃபோனில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த ரீடிங் KW h என்ற கணக்கில் இருக்கும். உங்களது மீட்டர் டிஜிட்டல் வகை என்றால் அருகே ஒரு பட்டன் இருக்கும் அதை அழுத்தினால் KW hல் ஒரு எண்ணிக்கை வரும். அதுதான் எடுக்க வேண்டிய ரீடிங்.
அதனை க்ளிக் செய்துகொள்ளுங்கள் இந்த ரீடிங்கைத்தான் மின்வாரிய அதிகாரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும். அப்போது உங்களது பெயர் மின்சார இணைப்பு எண்ணையும் இணைத்தே அனுப்ப வேண்டும். அது சரி, அதிகாரியின் வாட்ஸ் அப் எண்ணை பெறுவது எப்படி? என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். அதற்கான விளக்கம்.
- www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
- Reach us என்ற ஆப்ஷனில் உள்ள Contact Information என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- அதில் Distribution Regions ஐ க்ளிக் செய்தால் Director Distribution என்ற ஆப்ஷன் வரும். அதனையும் க்ளிக் செய்தால் மண்டல வாரியாக chief Engineer விவரங்கள் இருக்கும். அதில் நீங்கள் எந்த மண்டலம் என்பதை க்ளிக் செய்தால் உங்கள் மாவட்ட விவரம் வெளியாகும்.
- அதையும் க்ளிக் செய்து உள்ளே சென்றால் உங்கள் பகுதி மின்சார வாரியத்தின் முகவரி, தொலைபேசி எண், இமெயில் இருக்கும். அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கே நாம் எடுத்த ரீடிங் புகைப்படத்தை அனுப்ப வேண்டும். முன்னதாக அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் லேண்ட்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் எண் குறித்து ஒருமுறை அவர்களிடமே விவரத்தை கேட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் ரீடிங் புகைப்படத்தை அனுப்பியதும் மின் கணக்கீட்டை கணக்கிட்டு மின்வாரிய அதிகாரிகள் கட்டணம் தொடர்பான அறிவிப்பை மீண்டும் வாட்ஸ்-ஆப்பிலோ அல்லது இமெயிலுக்கோ திருப்பி அனுப்புவார். அந்த குறிப்பிட்ட தொகையை பொதுமக்கள் ஆன்லைன் முறையில் செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான மின் கட்டணம் ஏற்கெனவே கணக்கிடப்பட்டு பதிவிடப்பட்டிருந்தால் அதனை அதிகாரிகள் நீக்கிவிடுவார்கள். மேற்கொண்டு ஏதேனும் குளறுபடி, சந்தேகம் அல்லது குழப்பம் ஏற்பட்டால் மட்டும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து மின்வாரிய அதிகாரி வீட்டிற்கே நேரில் வருவார் எனக் கூறப்பட்டுள்ளது.
'உங்க போஸ்ட்பெய்ட் சிம் ப்ரீபெய்டா மாறணுமா?' ஒரே OTP தான் - வருகிறது புதிய முறை!