SmartPhone Battery | உங்க ஸ்மார்ட்ஃபோன் பேட்டரியில் பிரச்சனையா? அப்போ இதை உடனே பண்ணுங்க!
உங்களின் போன் பேட்டரியில் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதை சமாளிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன.
உங்களின் போன் பேட்டரியில் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதை சமாளிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன.
நாம் புது ஃபோன் வாங்கச் சென்றால் முதலில் கேட்பது பேட்டரி பேக் அப் பற்றிதான். காரணம் செல்போன் இல்லாமல் எதுவும் அசையாது என்றளவுக்கு நமது லைஃப்ஸ்டைல் மாறியுள்ளது. பயணத்தின் போது செல்போன் செயலிகளில் செய்தி, இல்லையேல் கேம்ஸ்ல், இல்லையேல் உறவுகள், நட்புகளுக்கு ஃபோன் செய்யவேண்டும். குறைந்தபட்சம் பாட்டாவது கேட்க வேண்டியுள்ளது. அலுவலகத்தில் மணி பார்க்கக் கூட செல்போன் தான். அப்புறம் இமெயில் அனுப்ப, பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ண, கேஷுவலா ஒரு செல்ஃபி எடுக்க என ஒரு ஃபோனை மல்ட்டி பர்போஸ் உபகரணமாக மாற்றி வைத்துள்ளோம்.
நம்முடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க அந்த ஃபோனுக்கு பேட்டரி பேக் அப் வேண்டும் அல்லவா? அதற்கு சில டிப்ஸ் இதோ:
1.செட்டிங்கஸ்ஸை மாற்றுங்கள்!
* உங்கள் ஃபோனை நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் திரை விரைவில் அணையும் வகையில் ஸ்க்ரீன் டைமரை குறைத்து வையுங்கள்.
* கண்கள் கூசும் அளவுக்கு ப்ரைட்னஸ் வைக்காமல் ஒளியின் அளவைக் குறைத்து வையுங்கள்.
* ஆட்டோமேட்டிக் ப்ரைட்னெஸ் மோட் கூட ஆன் செய்து வைக்கலாம்.
* செல்போனில் தேவையற்ற செயலிகளை டவுன்லோட் செய்யக்கூடாது. சில செயலிகளை பேட்டரி பேக் அப்பை உறிந்துவிடும்.
* பேட்டரி ஆப்டிமைசேஷன் என்றொரு ஆப்ஷன் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் இருக்கும். அதை ஆன் செய்து வைக்கவும்.
ஒவ்வொரு ஃபோனிலும் இந்த செட்டிங்க்ஸ் மாறுபடலாம். ஆகையால் உங்கள் தொலைபேசி நிறுவனத்தின் இணையத்தில் உலாவினால் சரியான தகவல் கிட்டும்.
2.சார்ஜ் செய்வதில் நேர்த்தி வேண்டும்:
* நீங்கள் ஃபோன் சார்ஜ் செய்யும்போது உங்கள் ஃபோனின் சார்ஜர், சார்ஜின் அடாப்டர்களை மட்டுமே பயன்படுத்தவும். மாற்றி பயன்படுத்தினால் பேட்டரி சேதமாகும்.
* எப்போது சார்ஜ் செய்தாலும் 98% மட்டுமே சார்ஜ் செய்யுங்கள். இதனால் பேட்டரியின் ஆயுட்காலம் கூடும்.
* அதேபோல் உங்கள் பேட்டரி பவர் 10%க்கும் கீழ் குறைந்தால் மட்டுமே அதை சார்ஜ் செய்வது நலம்.
* இவை தவிர பேட்டரி சேவர் மோட் படன்படுத்தலாம்.
3. நீங்கள் செய்யக்கூடாதவை:
* ஜிபிஎஸ், லொக்கேஷனை எப்போதும் ஆனில் வைக்கக்கூடாது.
* தொடர்ந்து வீடியோக்கள் பார்க்கக் கூடாது.
* தொடர்ந்து வீடியோ கேமும் விளையாடக் கூடாது.
* அதிக நேரன் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தக்கூடாது.
* கேமரா பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கல்.
4.ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகளை அவ்வப்போது செக் செய்யவும்:
* உங்கள் மொபைல் செட்டிங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள சிஸ்டம் அப்டேட் (System Update) என்பதை கிளிக் செய்து அதை நிறுவவும். அது முடிந்தவுடன் ஃபோன் வழிகாட்டுவது போலவே ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்தலாம்.
மொபைல் நெட்வொர்க் தேவைபடாத நேரங்களில் ஸ்மார்ட்போனை Airplane Mode இல் போட்டுவிடுங்கள். ஒரு நாளின் பெரும்பாலான பேட்டரி திறனை இந்த வழிமுறைகளில் மூலம் ஸ்மார்ட்போன் பயனர்கள் சேமிக்க முடியும். இவற்றைக் கடைப்பிடித்தாலே போதும் பேட்டரி பேக் அப் பக்காவாக பாதுகாக்கப்படும்.