WhatsApp profile photo: சிலருக்கு மட்டும் Whatsapp DP தெரியவேண்டாம்னு நினைக்கிறீங்களா? இதுதான் ஈஸியான வழி..
வாட்சாப் செயலியில் சில தொடர்புகளிடம் இருந்து உங்கள் ப்ரொஃபைல் படத்தை மறைப்பதற்கான வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.. இந்த சிறப்பம்சம் தற்போது ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

வாட்சாப் செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன. சில சிறப்பம்சங்கள் நம் கையில் கிடைக்கக்கூடியவை.. எந்த உதவியும் இல்லாமல் நாமே பயன்படுத்திக் கொள்ளலாம்.. வேறு சில அம்சங்கள் செயலியை சற்று ஆழமாகக் காணும் போது பயன்படுத்த முடியும்.
வாட்சாப் செயலி மூலமாக நம்முடைய `last seen’ நேரத்தைப் பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள முடியும்.. மெசேஜ்களுக்கு ஈமோஜி மூலம் ரியாக்ட் செய்வது, ஒவ்வொரு காண்டேக்டிற்கும் வால்பேப்பர் மாற்றுவது முதலான பல்வேறு அம்சங்கள் வாட்சாப் செயலியில் உண்டு. சமீபத்தில் இதுபோல சிறப்பம்சம் ஒன்று குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அதனை உங்களிடம் இங்கே பகிர்கிறோம்.
மேலும் படிக்க : Vijay Sethupathi: ரஜினி... விஜய்... கமல்... அஜித் மட்டும் பாக்கி... மூன்றே படத்தில் சூப்பர் ஸ்டார்களின் வில்லனான விஜய் சேதுபதி!
தனிப்பட்ட தொடர்புகளிடம் இருந்து உங்கள் வாட்சாப் ப்ரொஃபைல் படத்தை மறைக்கும் சிறப்பம்சம் வாட்சாப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிலரிடம் இருந்து உங்கள் ப்ரொஃபைல் படத்தை மறைக்கவோ, நீங்கள் அவர்களை ப்ளாக் செய்துவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்ளவோ நீங்கள் இவ்வாறு செய்து கொள்ளலாம்.. நேரடியாக ப்ளாக் செய்யாமல், இதன்மூலம் உங்களுக்கு அவர்களிடம் இருந்து மெசேஜ் வராமல் தடுக்க இது உதவும்.
வாட்சாப் செயலியில் சில தொடர்புகளிடம் இருந்து உங்கள் ப்ரொஃபைல் படத்தை மறைப்பதற்கான வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.. இந்த சிறப்பம்சம் தற்போது ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் ஆகிய இரு வகைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை எப்படி செய்வது?
1. வாட்சாப் செயலியைத் திறக்கவும்.
2. மேல்பக்கத்தில் வலதுபுற ஓரத்தில் இருக்கும் Settings டேபை அழுத்தவும்.
3. அதில் Account பகுதிக்குச் செல்லவும்.
4. அடுத்து Privacy பட்டனை அழுத்தவும்.
5. Profile Picture பட்டனை அழுத்தி, அதில் `My Contacts Except...' பட்டனை அழுத்தவும்.
6. உங்கள் ப்ரொஃபைல் படத்தைப் பார்க்க நீங்கள் விரும்பாத தொடர்பு எண்களைத் தேர்ந்தெடுக்கவும்.
7. மேல்பக்கத்தில் வலதுபுற ஓரத்தில் Done என்ற பட்டனை அழுத்தவும்.
இங்கே நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொடர்பு எண்களுடன் வழக்கம் போல் மெசேஜ்களை அனுப்புவதையும், பெறுவதையும் மேற்கொள்ள முடியும்.. எனினும், உங்கள் வாட்சாப் படத்திற்குப் பதிலாக அவர்களால் படம் இல்லாத வாட்சாப் டெம்ப்ளேட்டை மட்டுமே காண முடியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

