PayTm for Business | சிறிய வியாபாரிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி.. பேடிஎம் செயலியில் பெறுவது எப்படி?
பேடிஎம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கடன் தொகையை மிகக் குறைவான வட்டி விகிதத்துடன் அளிக்கிறது. இந்தச் சிறப்பம்சத்தை சிறிய வியாபாரிகளுக்குப் பயன் பெறும் வகையில் பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு வங்கிகள், பொருளாதார நிறுவனங்கள் முதலானவற்றோடு இணைந்துள்ள பேடிஎம் செயலி சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை, தினசரி சிறப்பான ஈஎம்ஐ திட்டங்கள் முதலானவற்றை மிகக் குறைவான வட்டி விகிதத்துடன் அளிக்கிறது. மேலும், இந்தச் சிறப்பம்சத்தை சிறிய வியாபாரிகளுக்குப் பயன் பெறும் வகையில் பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பேடிஎம் பிசினஸ் என்ற செயலியில் `மெர்சண்ட் லெண்டிங் ப்ரோக்ராம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தக் கடன் வசதியை பெறலாம். மேலும், இதன்மூலம் சிறிய வியாபாரிகளின் வர்த்தகம் பெருகும் வாய்ப்பும் உள்ளது. ஒரு வியாபாரியின் அன்றாட பணப் பரிமாற்றத்தின் அடிப்படையில் கடன் தொகையின் அளவு நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடனைப் பெறும் வழிமுறை முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கடனுக்காக டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கும் போது கூடுதலான ஆவணங்களை இணைக்கத் தேவையில்லை. மேலும், பேடிஎம் செயலியில் தினமும் வியாபாரியால் மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களின் அடிப்படையில் கடன் தொகை வழங்கப்படும். இந்தக் கடன் தொகைக்காக கூடுதலான கட்டணம் எதுவும் இல்லை.
பேடிஎம் செயலியின் மூலம் கடன் பெறுவது எப்படி? இதோ வழிமுறைகள்..
1. Paytm for Business என்ற செயலியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துபவர் என்றால் அதில் உங்களுக்கான கடன் ஆஃபர்களைப் பார்வையிட, அதில் உள்ள `Business Loan' என்ற ஆப்ஷனை அழுத்தவும், மேலும், உங்கள் தேவைக்கு ஏற்ப கடன் தொகையை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம்.
2. இதில் உங்கள் கடன் தொகை நீங்கள் தேர்ந்தெடுக்கவுடன் அதனையும், பெற்றுக் கொண்ட பணம், மொத்த தொகை, தினசரி செலுத்தப்பட வேண்டிய இன்ஸ்டால்மெண்ட் தொகை, காலகட்டம் முதலான விவரங்களை அளிக்க வேண்டும்.
3. இந்த விவரங்களை உறுதி செய்த பிறகு, அதில் உள்ள செக் பாக்ஸை க்ளிக் செய்து, `Get Started' என்ற பட்டனை அழுத்தி வங்கிக் கடனுக்கான பணியைத் தொடங்கலா. மேலும், உங்கள் KYC விவரங்களை CKYC பக்கத்தில் இருந்து பெற்று, உங்கள் கடன் விண்ணப்பத்தை விரைவாக முடிப்பதற்கான சம்மதமும் உங்களிடம் பெறப்படும்.
4. அடுத்த பக்கத்தில் உங்கள் பான் கார்ட் எண், பிறந்த தேதி, ஈ மெய்ல் முகவரி முதலானவற்றை செலுத்த வேண்டும். பான் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் க்ரெடிட் ஸ்கோர் சோதனை செய்யப்படும், மேலும் உங்கள் KYC விவரங்கள் தொடர்ந்து சரிபார்க்கப்படும்.
5. கடனுக்கான விண்ணப்பத்தை சமர்பித்ததும், உங்கள் வங்கிக் கணக்கிற்கு உங்கள் கடன் தொகை செலுத்தப்படும். மேலும், இந்த விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு முன்பு உங்கள் முழு விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.