உடனே உங்க ஃபோனை அப்டேட் பண்ணுங்க : ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அலர்ட் !
Android devices: ஆண்ட்ராய்ட் மொபைல்களில் சில வெர்சன்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை:
இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (The Indian Computer Emergency Response Team (CERT-In)), ஆண்ட்ராய்டின் இயங்குதளத்தின் பல்வேறு வெர்சன்களில் பல பாதிப்புகளை கண்டறிந்துள்ளதாக தெவித்துள்ளது. 12,12L, 13 மற்றும் 14 ஆகிய ஆண்ட்ராய்ட் வெர்சனில் பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
12,12L, 13 மற்றும் 14 ஆகிய ஆண்ட்ராய்ட் வெர்சன்களில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் பாதுகாப்பு முகமையான CERT-IN வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், முக்கியமான தகவல்களை திருடுவது, உயர்ந்த சலுகைகள் பெறுவது மற்றும் குறிப்பிட்ட அமைப்பில் இருந்து சேவை கிடைப்பதை தடுப்பது ஆகிய நோக்கில் சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் ஃப்ரேம்வோர்க், கூகுள் ப்ளே சிஸ்டர் அப்டேட், ஃப்ரேம்வோர்க், கெர்னல், கெர்னல் எல்.டி.எஸ். மீடியாடெக் காம்போனன்ட்ஸ், குவால்காம் காம்போனன்ட்ஸ், Arm காம்போனன்டஸ், குவால்காம் க்ளோஸ்ட் - ஸ்சோர் காம்போனன்ட்ஸ் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
12,12L, 13 மற்றும் 14 ஆகிய ஆண்ட்ராய்ட் வெர்சன்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் ஹேக்கர்களால் எளிதாக ஹேக் செய்யும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கின்றனர்.
இதனால் உங்களுடைய முக்கியமான தனிப்பட்ட தரவுகள். லாகின் பாஸ்வேர்ட்கள், தொடர்பு எண்கள், மெசேஜ்கள், கூகுள் தேடப்பட்ட விசயங்களின் வரலாறு விவரம் உள்ளிட்டவைகள் ஹேக்கர்களுக்கு எளிதாக கிடைக்கலாம். இந்த பாதிப்புகள் ஹேக் செய்யும் நபர்களுக்கு உதவியாக இருக்கும். இதைப் பயன்படுத்தி தரவுகளை எளிதாக எடுத்துவிட முடியும். அதோடு, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை முழுவதுமாக அழிக்கவும் வாய்ப்புள்ளது.
CERT-In குறிப்பிட்டுள்ள ஆண்ட்ராய்ட் வெர்சன் வைத்துள்ளவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை எப்படி சரிபார்ப்பது?
இதிலிருந்து எப்படி பாதுகாப்பது என்று கூகுள் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, எல்லாரும் ஸ்மாட்ஃபோன்களின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எப்போதும் ஆட்டோமெடிக் அப்டேட் என்பதை ஆன் செய்து வைக்குமாறு கூகுள் அறிவித்துள்ளது. அப்படியில்லை என்றால், செட்டிங்க்ஸ்-ல் Software Update" or "System Update" என்பதை க்ளிக் செய்து அப்டேட் செய்யவும்.
மொபைல் அப்டேட் செய்யப்பட்டதா?
- செட்டிங்ஸ் பயன்பாட்டைத் திறக்கவும்.
- Security பட்டனை கிளிக் செய்து பிறகு privacy - System & Updates ஆகிய பட்டன்களை அடுத்தடுத்து கிளிக் செய்யவும்
- பாதுகாப்பு அப்டேட்களுக்காக, பாதுகாப்பு அப்டேட்டை கிளிக் செய்யவும்.
- Google Play சிஸ்டம் அப்டேட்களுக்கு, Google Play சிஸ்டம் அப்டேட்டை கிளிக் செய்யவும்.
கவனிக்க..
கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்கம் செய்யும்போது, அதன் சோர்ஸ் செக் செய்ய வேண்டும். கவனமுடன் இருக்கவும்.
செயலிகளுக்கு ஸ்மாட்ஃபோன்களில் உள்ளவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் முன் கவனமுடன் இருக்கவும். மிகவும் அவசியம் எனில் மட்டும் அனுமதி வழங்கவும். தேவையற்றவைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டியதில்லை.
’ two-factor authentication' எப்போதும் எனேபிள் செய்யவும்.