பெண்ணின் மார்ஃபிங் போட்டோஸ்.. GOOGLE, YOUTUBE க்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
அந்த வகையில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவும் அதன் மீதான விசாரணையும் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது.
தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. இன்று பலரும் சமூக வலைத்தளங்களையே தங்களின் வருமானத்தின் மூலதனமாக நம்பியுள்ளனர். குறிப்பாக பெண்கள் யூடியூப் போன்ற தளங்களில் சமையல் வீடியோ, டெயிலி விலாக் என அசத்தி அதன் மூலம் பிரபலம் என்ற அந்தஸ்தயும் , வருமானத்தையும் பெருகின்றனர். சமூக வலைத்தளங்களில் சமுதாயத்தின் தீவிர தொற்றாக மாறிவிட்டது. சில நேரங்களில் அதன் வளர்ச்சியை கண்டு மெச்சுகிறோம். சில சமயங்களில் அதன் ஆபத்தை உணர்ந்து அஞ்சுகிறோம். பெண்களுக்கு சமூக வலைத்தளங்களால் நிறைய சிக்கல்கள் ஏற்படுவதையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே அறிய காண்கிறோம்.அந்த வகையில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவும் அதன் மீதான விசாரணையும் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் திருமணமானவர் . அவர் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் யூடியூப் மற்றும் கூகுள் போன்ற வலைத்தளங்களில் மார்ஃபிங் செய்யப்பட்டு , வெவ்வேறு கணக்குகளில் பகிரப்பட்டு வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அதை நீக்கக்கோரி , கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பிரமணியன் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பெண்ணின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி உடனடியாக அவர் சம்பத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சம்பத்தப்பட்ட தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கூகுள் எல்.எல்.சி (google llc) மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும் இது குறித்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் டெல்லி சைபர் பிரிவு காவல்துறையினருக்கும் அறிவுறுத்தியுள்ளார். இந்த மனு மீதான மறு விசாரணை செப்டம்பர் 16 ஆம் தேதி நடைப்பெறும் என அறிவித்த நீதிபதி அப்போது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனுராக் அலுவாலியா பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்ஃபிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட தளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டும். பிரமாண பத்திரிக்கை தாக்க செய்ய மட்டும் கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே போல கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மம்தா , மனுதாராரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்த 10 யூடியூப் சேனல்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன. அதே போல கூகுள் தளங்களில் இருந்த புகைப்பட URL - ம் நீக்கப்பட்டுவிட்டன என தெரிவித்தார்.