கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா விதித்த அபராதம் - சட்டப்பூர்வ சவால்களை எதிர்க்கொள்ள கூகுள் முடிவு !
வீடியோ வெளியீடு சேவைகள், இணைய உலாவுதல், இணைய தேடுதல், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்காக ஆன்ட்ராய்டு இயங்கு முறைக்கான லைசென்ஸ் முறையில் கூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறியுள்ளது
கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (competition commission of india) 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்த நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்பூர்வ சவால்களை சந்திக்கவுள்ளது.
ஸ்மாட்ஃபோன்களுக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றழைக்கப்படும் இயங்குதளம் மிகவும் அவசியமானது. அந்தவகையில், ஆண்ட்ராய் என்ற ஓ.எஸ்.-ஐ கடந்த 2005-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. அதிலிருந்து ஸ்மாட்ஃபோன்கள் நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தொடங்கியது. அதாவது ஸ்மாட்ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கான ஓ.எஸ். பயன்பாட்டிற்கு ஆண்ட்ராய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நடைமுறைகளில் கூகுள் நிறுவனம் போட்டியாளர்களுக்கான விதிமுறைகளை மீறியுள்ளாதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வீடியோ வெளியீடு சேவைகள், இணைய உலாவுதல், இணைய தேடுதல், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்காக ஆன்ட்ராய்டு இயங்கு முறைக்கான லைசென்ஸ் முறையில் கூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறியுள்ளது. உலகம் முழுவதும் கூகுள் அதிக நம்பிக்கையற்ற ஆய்வை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்ப்புகள் வந்துள்ளன. கடந்த மாதம், ஒரு ஐரோப்பிய நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டின் தீர்ப்பை உறுதிசெய்தபோது, நிறுவனம் "ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களின் உற்பத்தியாளர்கள் மீது சட்டவிரோதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது “ என உறுதிப்படுத்தியதை அடுத்து கூகுள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அங்குள்ள நீதிமன்றத்தால் கிட்டத்தட்ட ரூ. 33,800 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
கூகுள் வரைமுறைகளை மீறியதாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:
ஸ்மாட்ஃபோன்களுக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றழைக்கப்படும் இயங்குதளம் மிகவும் அவசியமானது. அந்தவகையில், ஆண்ட்ராய் என்ற ஓ.எஸ்.-ஐ கடந்த 2005-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. அதிலிருந்து ஸ்மாட்ஃபோன்கள் நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தொடங்கியது. அதாவது ஸ்மாட்ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கான ஓ.எஸ். பயன்பாட்டிற்கு ஆண்ட்ராய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நடைமுறைகளில் கூகுள் நிறுவனம் போட்டியாளர்களுக்கான விதிமுறைகளை மீறியுள்ளாதாக கூறப்பட்டுள்ளது.மேலும், இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து சந்தைகளை கணக்கில் கொண்டு அதனடிப்படையில் கூகுள் நிறுவனம் சந்தையில் ஆளுமை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
- இந்தியாவில் ஸ்மார்ட் மொபைல் சாதனங்களுக்கான உரிமம் பெற்ற ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான சந்தை
- இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான ஆப் ஸ்டோர் விற்பனைக்கான சந்தை
- இந்தியாவில் வழங்கப்படும் பொதுவான இணைய தேடல் சேவைகளுக்கான சந்தை
- இந்தியாவில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அல்லாத குறிப்பிட்ட மொபைல் இணைய தேடுபொறிக்கான சந்தை
- இந்தியாவில் ஆன்லைன் வீடியோ ஹோஸ்டிங் தளத்திற்கான சந்தை (OVHP).
கூகுள் நிறுவனம் பல்வேறு சந்தைகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தியது மற்ற போட்டியாளர்களின் வாய்ப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில் ஆண்ட்ராய்டில் இந்தியாவின் நம்பிக்கைக்கு எதிரான தீர்ப்பை சட்டரீதியாக சவால் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.