இனி இந்தி எல்லாம் கற்க தேவையில்லை...மொழி பிரச்சனையை தீர்க்கும் கூகுளின் அட்டகாசமான அப்டேட்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இரு வெவ்வேறு மொழிகளை லைவாக மொழிபெயர்த்து சொல்லும் வசதியை கூகுள் மீடில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்

ஏ.ஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மனிதர்கள் நாடுகடந்து ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள மொழி ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் அட்டகாசமான அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இருவர் கூகுள் மீட்டில் எந்த வித தடையுமின்றி பேசிக் கொள்ளலாம்
கூகுள் மீட்டில் லைவ் ஆடியோ மொழிபெயர்ப்பு
கூகுள் I/O நிகழ்வில் கூகுள் மீட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய வசதியை சுந்தர் பிச்சை அறிமுகம் செய்தார். கூகுளின் டீப் மைண்ட் செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் வெவ்வேறு மொழிகள் பேசுவதை லைவாக பேசுபவர்களின் குரல் மற்றும் தொனி மாறாமல் அப்படியே மொழிபெயர்த்து தரக்கூடியது இந்த புதிய வசதி.
அதாவது இந்த வசதியின் மூலம் ஆங்கிலம் பேசுபவர் ஒருவர் ஸ்பேனிஷ் பேசும் ஒருவருடன் தனது மொழியில் சரளமாக பேசலாம். ஆங்கிலத்தை பேசுபதை ஸ்பேனிஷ் மொழியிலும் ஸ்பேனிஷ் மொழியை ஆங்கிலத்திலும் லைவாக மொழிபெயர்த்து தருகிறது கூகுள். இந்த புதிய வசதி மனிதர்களுக்கு இடையிலான மொழி பிரச்சனைகளுக்கு ஒரு பெரிய தீர்வாக இருக்கும் என நம்பப் படுகிறது. தற்போது இந்த வசதி கூகுள் சந்தாதாரர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதியளிக்கப் பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷ் ஆகிய இரு மொழிகள் மட்டுமே மொழிபெயர்க்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கூகுளின் இந்த புதிய வசதி உலகளவில் மக்களின் வரவேற்பைப் பெற்று தருகிறது.
மொழி என்பது ஒவ்வொரு நில மக்களின் தனி அடையாளமாக கருதப்படுகிறது. விருப்பத்தின் பேராலோ தொழில் நிமித்தமாக மக்கள் பல்வேறு மொழிகளை கற்கிறார்கள். ஆனால் அதே மொழியை ஒரு அரசு இன்னொரு மக்களிடம் திணிக்க முற்படுகையில் பிரச்சனை எழுகிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான முதன்மையான கருவியாக மொழி கருதப்படும் சூழலில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த தொழில் நுட்பம் இன்றைய காலக்கட்டதில் மிக அவசியமான மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம் .
Google Meet just changed the game.
— czverse 🔺 (@czverse) May 21, 2025
Real-Time Translation is here!
You speak Bangla.
They speak Spanish.
Now you both hear each other—in your own language.
No more language barriers in meetings.
Just pure connection.
Available now in Spanish, Italian, German, Portuguese & more. pic.twitter.com/3fULYlnM1M




















