Google Lay off: கூகுள் பணிநீக்கம் செய்த 8 மாத கர்ப்பிணி.. அடுத்து நடந்தது என்ன? வைரலாகும் கண்ணீர் பதிவு
கூகுள் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணியின் பதிவு உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பணியாளர்களில் 12, 000 பேரை பணிநீக்கம் செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது. கூகுள் நிறுவன வரலாற்றில் ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஏன் என்பது குறித்து, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்திருந்தார்.
சுந்தர் பிச்சை விளக்கம்:
கூகுள் நிறுவன தலைமை மற்றும் போர்ட் உறுப்பினர்கள் உடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவை எட்டியதாக, ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மெயில் ஒன்றை அனுப்பினார். இவை நான் எடுக்க வேண்டிய முடிவுகள் என்பது முக்கியமானது. பணி நீக்கம் என்பது திடீரென செய்யப்படவில்லை. கவனமாக பரிசீலித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டது. நிறுவனத்தை சரியான பாதையில் கொண்டு செல்லவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
View this post on Instagram
8 மாத கர்ப்பிணி நீக்கம்:
பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆல்பாபெட் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான கேதரின் வாங்கும் ஒருவர். ப்ரோகிராம் மேனேஜராக பதவி வகித்த அவருக்கு இன்னும் ஒரு வாரங்களிலே பிரசவ கால விடுமுறை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
A Google employee being pregnant with twins was laid off today,
— Nirbhay Singh (@nirbhaysingh281) January 20, 2023
This is very painful .#layoffs #Google pic.twitter.com/iufH7u5E1u
இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
”ஏற்று கொள்ள முடியவில்லை”
பணி நீக்கம் செய்யப்பட்டதாக இமெயில் வந்ததை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். தனது குழந்தையின் வருகைக்காக மகிழ்ச்சியில் இருந்த நான், இந்த செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என்னுடைய வேலைத்திறன் திருப்திகரமாக இருந்ததாக கூறப்படும் நிலையில், இப்படி ஒரு செய்தி பெரிதும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதிலும் பணி நீக்கம், செய்யப்பட்ட காலமானது மிகவும் நெருக்கடியான காலமாகும்.
”இதுவும் கடந்து போகும்”
பிரசவ கால விடுமுறையில் செல்லவிருந்த எனக்கு, இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. என் குழந்தை ஆரோக்கியத்துடன் உலகை பார்க்க வேண்டும். என் குழந்தையின் நலன் கருதி,எதிர்மறையான எண்ணங்கள் வராமல் இருக்க முயற்சி செய்கிறேன். எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி. இதுவும் கடந்து போகும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

