Jio Fiber Price: ரூ.199-க்கு 1000 ஜிபி இண்டர்நெட் - அடேங்கப்பா ஆஃபரை அறிவித்த ஜியோ!
1 டிபி இண்டர்நெட்டை அதாவது 1000 ஜிபி இண்டர்நெட்டை வெறும் ரூ.199-க்கு அறிமுகம் செய்துள்ளது ஜியோ.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி வேலைசெய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மொபைல் போன் பயன்பாடு மற்றும் இணையதள டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜியோ தனது அடுத்த ஆட்டத்தை ஆட தொடங்கியுள்ளது. ப்ரீபெய்ட் திட்டத்தில் பல அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஜியோ பைபர் இண்டர்நெட்டில் அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது. 4k வசதிகொண்ட செட்டாப் பாக்ஸுடன் போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் மாதத்திற்கு ரூ.399-க்கு கிடைக்கிறது. மாதமாதம் பணம் செலுத்த வேண்டும் என்ற திட்டம் மட்டுமல்ல, ஒரு வருடம் அல்லது 6 மாதங்கள் எனவும் பேக்கேஜ்களை கொடுத்துள்ளது ஜியோ.
அந்த வகையில் ஜியோ பைபர் திட்டத்தில் 1 டிபி இண்டர்நெட்டை அதாவது 1000ஜிபி இண்டர்நெட்டை வெறும் ரூ.199க்கு அறிமுகம் செய்துள்ளது ஜியோ. ஆஹா...! வெற லெவல் ஆஃபர் என்று தோன்றினாலும் இதற்கு சில விதிகளை கூறியுள்ளது ஜியோ.
ரூ.199க்கு 1000ஜிபி என்றாலும் இது வரிகள் இல்லாத விலை. இதே ஆஃபர் வரிகளை சேர்த்தால் ரூ.250ஐ நெருங்குகிறது.
இந்த ப்ளானுக்கு வேலிடிட்டி வெறும் 7 நாட்கள் மட்டுமே. 7 நாட்களுக்குள் வேண்டுமானால் நீங்கள் 1000ஜிபி-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.1000 ஜிபி வரை உங்களுக்கு 100Mbps வேகம் இருக்கும். அதன் பின் வேகம் குறையும். வேலிடிட்டிக்கான 7 நாட்களுக்கும் இலவச வாய்ஸ் காலிங் உண்டு. 1000ஜிபியை 7 நாட்களுக்குள் எப்படி முடிக்க முடியும் என்ற சந்தேகம் வருகிறதா? ஏனென்றால் இந்த ப்ளான் சாதரண இணைய பயன்பாட்டர்களை மனதில் வைத்து கொடுக்கப்பட்டதே இல்லை. அதுவும் இல்லாமல் இது ஒரு “Data Sachet” ப்ளான்.
அதென்னவென்றால் வழக்கமாக கொடுக்கப்பட்டிருக்கும் ப்ளான் வேலிடிட்டி முடியும் முன்பே காலியாகிவிட்டால் ஒரு எக்ஸ்டா தேவைக்காக மட்டுமே இந்த ப்ளானை பயன்படுத்தமுடியும். பொதுவாக அதிக ப்ளானையே ஜியோ கொடுக்கிறது அந்த ஜிபியையே காலி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் அது முடிந்தால் இது என்ற ஆப்ஷனை கொடுத்துள்ளது ஜியோ. அப்படியானால் நிச்சயம் பெரிய அளவில் இண்டர்நெட் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கோ, கடைகளுக்கோ தான் இந்த ஆஃபர் பயன்படும் என தெரிகிறது. வழக்கமான இணையதள பயன்பாட்டாளர்களுக்கு கைகொடுக்காது என்றாலும் அதிக நெட் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல ஆஃபர் என்றே தெரிகிறது.
முன்னதாக, ரூ.399 முதல் ப்ரீபெய்ட் பைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ. இந்த ப்ளானில் 30Mbps ஸ்பீடு இண்டர்நெட் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ரூ,699 ப்ளானில் 100Mbps ஸ்பீடு இண்டர்நெட், ரூ.999 ப்ளானில் 150Mbps இண்டர்நெட் ஸ்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.999 ப்ளானில் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார்,சோனொ லைவ் உள்ளிட்ட 12 சப்ஸ்கிரைப்ஸ்களை கொண்டது. அதேபோல் 300Mbps நெட் வேகத்தில் ரூ.1499 ப்ளானும், 500Mbps வேகத்தில் Rs 3999 ப்ளானும் உள்ளது.