Whatsapp Facebook Instagram Outage | ’தோழி இல்லையே’ ’ட்விட்டர்தான் ராஜா’ - மீம்ஸை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..
ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் இயங்காத அந்த சில மணி நேரங்களில் ட்விட்டர்தான் ராஜா. சேவைகள் முடங்கியதை கிண்டலடித்தும், கலாய்த்தும் நெட்டிசன்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கினாலும் கூட சமாளித்துவிடலாம், வாட்சப் முடங்கினால் பல்வேறு துறையின் வேலைபாடுகள் நின்றுவிடும். இப்படி, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்கள் நேற்று பல மணி நேரங்களுக்கு முடங்கின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்சப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் தற்காலிகமாக முடங்கியதால் பயனர்கள் குழப்பத்திலும், தவிப்பிலும் ஆழ்ந்தனர்.
கிட்டத்தட்ட 6 மணிநேரம் கழித்து மீண்டும் இயங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், “மன்னிக்கவும், இந்த சேவைகளை நீங்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறீர்கள் என தெரியும். இப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்சப் மீண்டும் இயங்கத் தொடங்கியது” என பதிவிட்டுள்ளார்.
We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to get things back to normal and will send an update here as soon as possible.
— WhatsApp (@WhatsApp) October 4, 2021
Thanks for your patience!
ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் இயங்காத அந்த சில மணி நேரங்களில் ட்விட்டர்தான் ராஜா. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் முடங்கியதை கண்டித்தும், கிண்டலடித்தும், கலாய்த்தும் நெட்டிசன்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். குலுகுலுங்க சிரிக்க வைக்கும் மீம்ஸ் தொகுப்பில் சில ஹைலைட் மீம்ஸ் இதோ.
Facebook and Instagram users coming to Twitter right now pic.twitter.com/bfQvHoRbpo
— Rajabets India🇮🇳👑 (@smileandraja) October 4, 2021
Meanwhile Indian family/ colony/ friends chat groups…
— Shilpa (@shilpakannan) October 4, 2021
With no good morning msgs, no flowers and god pics and no fake forwards pic.twitter.com/27aMTCVKto
Facebook, Instagram and WhatsApp down....
— Swanzy Kelvin (@Swanzy_Kelvin) October 4, 2021
Time for us on Twitter ! pic.twitter.com/SSxc4M5vqM
Facebook & all its associated applications are down worldwide.
— Malik (@sniper_7779) October 4, 2021
Twitter, the last man standing......#WhatsApp pic.twitter.com/13JpEt6rFz
Ok Facebook and Instagram is back. y’all can leave now pic.twitter.com/82lKrNVugV
— Dwayne (@DwayneOfficial) October 4, 2021
Twitter trying to keep social media alive while Facebook and Instagram are down pic.twitter.com/SJEXOwZyVj
— Phase Zero - MCU (@PhaseZeroCB) October 4, 2021
When whatsapp, Facebook and Instagram come back online and you don’t receive any message pic.twitter.com/dhvgBTbi7d
— Mr. Oteng (@kayswizz33) October 4, 2021
இந்நிலையில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் சேவைகள் இன்று அதிகாலை 4 மணி முதல் மீண்டும் இயங்க தொடங்கியது. மீண்டும் பயன்படுத்த தொடங்கிய பின்பும், மீம்ஸ்களை ஸ்டாக் வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள். “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் இயங்காத இந்த சில மணி நேரங்களிலும் எனக்கு மெசேஜ் அனுப்ப ஒரு தோழர் / தோழி இல்லையே” போன்ற மீம்ஸ்கள் மீண்டும் வைரலாகி வருகின்றது.