மேலும் அறிய

Facebook India Head Resigns: பேஸ்புக் இந்தியப் பிரிவு தலைவர் அஜித் மோகன் ராஜினாமா - காரணம் இதுதான்!

சமூக வலைதளமான பேஸ்புக்கின் இந்தியப் பிரிவுக்கான தலைவர் அஜித் மோகன், மற்றொரு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

சமூக வலைதளமான பேஸ்புக்கின் இந்திய பிரிவுக்கான தலைவர் அஜித் மோகன், வேறு ஒரு நிறுவனத்தில் மற்றொரு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

அஜித் மோகன், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிர்வாக இயக்குநராக பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு சேர்ந்தார். இவரது பதவிக் காலத்தில் இன்ஸ்கிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் 20 கோடி இந்தியப் பயனர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மெட்டா நிறவனத்தின் துணைத் தலைவர் நிகோலா மென்டல்சோன் வெளியிட்ட அறிக்கையில், "மற்றொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மெட்டா குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றா பேஸ்புக்கின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் நிர்வாக இயக்குநராக சேர்வதற்கு முன் ஸ்டார் குழுமத்தின் ஹாட்ஸ்டாரில் தலைமைச் செயல் அதிகாரியாக அஜித் மோகன் 4 ஆண்டுகள் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தங்களின் பெரும்பாலான ஃபாலோவர்ஸை இழந்து வருவதாக பேஸ்புக் பயனாளர்கள் புகார் தெரிவித்து வருவது பிரச்னையாக வெடித்தது. 

கிட்டத்தட்ட 119 மில்லியன் ஃபாலோவர்களை மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அலுவலருமான மார்க் ஜுக்கர்பெர்க் இழந்தார். இதன் காரணமாக, அவரை பின்தொடர்பவரின் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக குறைந்தது.

இதேபோல், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஹனி ட்ராப்பிங் மற்றும் மால்வேர் மூலம் நடிகர்கள், அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் சாதனங்களில் குறிப்பாக இந்தியாவில் உள்ள மக்களை குறிவைத்து, பாகிஸ்தான் அரசு நிகழ்த்தும் மோசமான  இணைய உளவு நடவடிக்கையை பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா  முறியடித்தது.

இந்த உளவு நடவடிக்கை இந்தியாவைத் தவிர, பாகிஸ்தானில் உள்ள ஹேக்கர்கள் குழு , இது பாதுகாப்பு துறையில் APT36 என அறியப்படுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ளவர்களை குறிவைத்ததாக மெட்டாவின் காலாண்டு 'எதிர்ப்பு அச்சுறுத்தல் அறிக்கை' தெரிவித்தது.

"எங்கள் விசாரணை இந்த செயல்பாட்டை பாகிஸ்தானில் உள்ள அரசுடன் செயல்படுபவர்களுடன் இணைக்கிறது" என்று மெட்டா குறிப்பிட்டிருந்தது. அந்தக் குழுவின் செயல்பாடு தொடர்ந்து இருந்ததாகவும் மேலும் இண்டர்நெட் வழங்கும் இமெயில், ஃபைல் ஹோஸ்டிங், சோஷியல் மீடியா எனப் பல்வேறு தளங்களில்  இது விரவி இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 "ஆன்லைனில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர்களைக் குறிவைத்து APT36 குழு பல்வேறு தீங்கிழைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி அவர்களின் சாதனங்களை மால்வேர் மூலம் பாதிக்கிறது. அவர்கள் மார்ப்பிங் போன்ற போலியான பயன்பாடுகளின் கலவையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்கும் சாதனங்களை இலக்காகக் கொண்டு தங்கள் பொருளை விநியோகிக்கிறார்கள்," என்று மெட்டா எச்சரித்தது.

APT36 கற்பனையான நபர்களைப் பயன்படுத்தியது. சட்டப்பூர்வ மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் கவர்ச்சிகரமான இளம் பெண்கள் அல்லது காதல் தொடர்பைத் தேடும் இராணுவப் பணியாளர்கள் குறிவைத்த நபர்களிடம் நம்பிக்கையை வளர்க்கும். பிறகு தங்கள் உருவாக்கத்தை அவர்களிடம் திணிக்கும். "இந்த டொமைன்களில் சில, புகைப்படப் பகிர்வு இணையதளங்கள் அல்லது பொதுவான ஆப் ஸ்டோர்களாக மாறியுள்ளன, மற்றவை Google Play Store, Microsoft's OneDrive மற்றும் Google Drive போன்ற உண்மையான நிறுவனங்களின் டொமைன்களை ஏமாற்றுகின்றன" என்று மெட்டா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Breaking News LIVE 18th NOV 2024: ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
Breaking News LIVE 18th NOV 2024: ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்
Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Embed widget