Elon Musk: அடேங்கப்பா! சாட் ஜிபிடிக்கு போட்டியாம்.. எலான் மஸ்க் ஆரம்பித்த புது கம்பெனி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
Elon Musk: டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் XI எனும் புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
சாட் ஜிபிடி(ChatGPT)
நமது அன்றட வாழ்வில் விடை தெரியாத எந்த ஒரு கேள்வியை நாம் எதிர்கொண்டாலும், அதற்கான விடையை தேடி நாம் செல்லும் முதல் இடம் கூகுள். ஏன் என்றால் கூகுளில் கிடைக்காத பதில்களும் இல்லை, தகவல்களும் இல்லை என்ற மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. ஆனால், அதற்கே சவால் விடும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், OpenAI எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு அறிமுகமானதுதான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி(ChatGPT).
இந்த ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், நேற்று XAI எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார். ஏற்கனவே நியூராலிங்கில் மனித மூளையில் சிப் வைத்து பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டு வரும் எலான் மஸ்க் AI துறையை விட்டு வைக்காமல் இருப்பாரா? அதன்படியே சாட் ஜிபிடிக்கு போட்டியாக XAI எனும் புதிய நிறுவனத்தை தொடங்கினார் எலான் மஸ்க்.
XAI நிறுவனம்
ஓப்பன் ஏஐ மற்றும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களின் குழுவைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
Announcing formation of @xAI to understand reality
— Elon Musk (@elonmusk) July 12, 2023
இந்த நிறுவனத்தின் அணி, நிறுவனம் குறித்த விவரங்களை ஜூலை 14-ஆம் தேதி ட்விட்டர் ஸ்பேஸ் சாட்டில் மக்கள் கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ந XAI நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க், இகோர் பாபுஷ்கின், மானுவேல் குராயிஸ், கிறிஸ்டியன் செகெடி, ஜிம்மிபா, குடோங் ஜாங், ஜிஹாங் டாய் ஆகியோர் உள்ளனர். மேலும், உலகத்தின் உண்மையான தன்னையை புரிந்துகொள்வதே XAI நிறுவனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது வரை XAI எப்படி செயல்படுகிறது என்பது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஏஐ குறித்து பலமுறை எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். அதனை மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று எலான் மஸ்க் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Threads App: அய்யய்யோ.. ஆப்பு வைத்த த்ரெட்ஸ் ஆப்.. குமறும் நெட்டிசன்ஸ்.. அந்த அளவுக்கு என்னதான் ஆச்சு?