சம்பளத்தைத் தரமுடியாததால் ஆட்குறைப்பா?: செய்தியை மறுத்துள்ள எலான் மஸ்க்
சனிக்கிழமையன்று அன்று வெளியான ஊடக அறிக்கைகளின்படி, ட்விட்டரின் நான்கு முக்கிய உயர் நிர்வாகிகளை அவர் பணிநீக்கம் செய்ததாகச் செய்தி வெளியாகி இருந்தது
ட்விட்டரின் புதிய தலைவரான எலோன் மஸ்க், ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்த நியூயார்க் டைம்ஸ் செய்தியை மறுத்துள்ளார்.
ஒரு ட்விட்டர் பயனாளர் பணிநீக்கம் பற்றி கேட்டதற்கு, மஸ்க் அது தவறான தகவல் என பதில் அளித்துள்ளார்
நியூயார்க் டைம்ஸ் கடந்த சனிக்கிழமையன்று, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனம் முழுவதும் வேலைக் குறைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சில குழுக்களில் மற்றவர்களை விட அதிகமாக ஆட்குறைப்பு இருக்கும் என்றும், நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னர் பணிநீக்கங்கள் நடைபெறும் என்றும், ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விஷயத்தை நன்கு அறிந்த அடையாளம் தெரியாத நபர்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் நிறுவன செய்திகளும் சனிக்கிழமை தொடங்கியே இந்த ரைட் சைஸிங் நிகழலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
சனிக்கிழமையன்று அன்று வெளியான ஊடக அறிக்கைகளின்படி, ட்விட்டரின் நான்கு முக்கிய உயர் நிர்வாகிகளை அவர் பணிநீக்கம் செய்ததாகச் செய்தி வெளியாகி இருந்தது. அவர்களுக்கு அதிக அளவிலான கொடுப்பணவுகளைத் தருவதைத் தவிர்க்கும் பொருட்டே இந்த முடிவை மஸ்க் எடுத்திருந்ததாக செய்திகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் ஆட்குறைப்பு தொடர்பான செய்திகளை முற்றிலுமாக மஸ்க் மறுத்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று அந்த சமூக ஊடக தளத்தை 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து, ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் சட்ட விவகாரங்கள் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோரை மஸ்க் நீக்கம் செய்தார்.
ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை தொடர்பாகத் தன்னையும் பிற ட்விட்டர் முதலீட்டாளர்களையும் அவர்கள் தவறாக வழிநடத்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதை அடுத்து நீக்கம் செய்யப்பட்ட நால்வரும், ஆராய்ச்சி நிறுவனமான ஈக்விலரின் தகவல்படி, சுமார் $122 மில்லியன் தங்கள் பணிநீக்கத்தை அடுத்து மொத்தமாகப் பெற்றுள்ளனர்.
இந்த ஆட்குறைப்பு செய்திகள் இன்று நேற்று வெளியானவை அல்ல,
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதை உறுதிசெய்ததையடுத்து ட்விட்டர் சிஇஓ பரக் அக்ராவல் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் ஆகியோர் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்..
பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை உலகில் பலகோடி பயனாளர்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்நிறுவனத்தின் 9.2% பங்குகளை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவும், உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க் வைத்திருந்தார். அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை முழுவதுமாக வாங்கினார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார் எலான் மஸ்க். இதனையடுத்து நீதிமன்றத்தில் ட்விட்டர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ட்விட்டர் நிறுவனம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குகள் உள்ளது என்றும் தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் இயங்கி வருகிறது. போலி கணக்குகள் குறித்த கேள்விகளுக்கு ட்விட்டர் நிர்வாகம் பதிலளிக்கத் தவறிவிட்டது என்றும் எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார்.
ட்விட்டரை வாங்குவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கான விடை இழுபறியாகவே இருந்துவந்த நிலையில் தற்போது ட்விட்டரை மஸ்க் வாங்குவது உறுதியாகியுள்ளது. ட்விட்டரை வாங்குவதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தி சிஇஓவான பரக் அக்ராவல், சட்டம், கொள்கை மற்றும் அறக்கட்டளையின் தலைவர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் ஆகியோர் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து வெளியேறினர். இனி மீண்டும் திரும்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ட்விட்டரில் பணிபுரிந்து வந்த பரக் அக்ராவல், கடந்த ஆண்டு நவம்பரில் அந்நிறுவனத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு முதல் சிஇஓ-வாக இருந்த ஜாக் டோர்ஸே விலகியதை அடுத்து இந்தியரான பரக் அக்ராவல் நியமனம் செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு முதல் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்ற பரக் அக்ராவலுக்கு, கடந்த ஆண்டு தான் சிஇஓ பொறுப்பு தேடிவந்தது. ஆனால், சில மாதங்களுக்குள்ளாக ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதால் பரக் அக்ராவல் அந்த பொறுப்பில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதோடு, ட்விட்டரின் நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்திருந்த மஸ்க், தான் ட்விட்டரை வாங்கியவுடன் பலருக்கு வேலை போகும் என்பதையும் முன்பே தெரிவித்திருந்தார். அதோடு சமீபத்தில் கூட ட்விட்டரின் 75% பணியாளர்களை நீக்க இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.