(Source: ECI/ABP News/ABP Majha)
Apple Watch :12 வயது சிறுமியை புற்றுநோயில் இருந்து காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்...! என்ன நடந்தது தெரியுமா..?
இது குறித்து இமானியின் தாய் கூறுகையில் நான் இரண்டு நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்க கூடும் என்றார்.
ஆப்பிள் வாட்ச் மூலம் 12 வயது சிறுமிக்கு இருந்த புற்றுநோய் கண்டறியப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இமானி மைல்ஸின் என்னும் 12 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த வாட்சானது சிறுமியின் இதய துடிப்பு அசாதாரணமாக இருப்பதாக இரண்டு நாட்களாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதய துடிப்பு அதிகமாக இருப்பதை கண்ட குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அங்கு அவருக்கு appendix அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தவே , அதனை செய்து முடித்திருக்கின்றன. சிறுமியின் வயிற்றில் இருந்தது சாதாரண கட்டி அல்ல, அது ஒரு நியூரோஎண்டோகிரைன் கட்டி. அதாவது புற்றுநோய்க்கட்டி, இதனை கண்டறிந்த மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை கொடுத்து அகற்றியிருக்கின்றனர். இந்த கட்டி குழந்தைகளிடையே பொதுவானதல்ல.
இது குறித்து இமானியின் தாய் கூறுகையில் நான் இரண்டு நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்க கூடும் . ஆனால் அந்த ஆப்பிள் வாட்சின் தொடர் வார்னிங் செய்திகளால்தான் நான் என் மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன் என்றார். மருத்துவர்களால் இமானியின் புற்றுநோய்க்கட்டி அகற்றப்பட்ட நிலையில் அவருக்கு உடலின் மற்ற பாகங்களிலும் புற்றுநோய் பரவியது கண்டறியப்பட்டது. இதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர், விரைவில் இமானி முழுமையாக குணமடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி எந்த பதிப்பு ஸ்மார் வாட்சை அணிந்திருந்தார் என தெரியவில்லை . ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க ஆப்பிள் வாட்ச் உதவியாக இருந்திருக்கிறது. ECG மற்றும் இதயத் துடிப்பு அளவுகள் போன்ற சில வசதிகள் ஆப்பிள் வாட்சில் அறிமுகப்படுத்தப்படிருக்கின்றன. இந்த வசதிகள் இமானியின் நோயை மட்டுமல்ல கடந்த காலங்களிலும் பலரின் உயிரை காப்பாற்றியிருக்கின்றன. 2020ம் ஆண்டில், ஒரு ஆப்பிள் வாட்ச் 25 வயது இளைஞர் ஓய்வெடுக்கும் சமயத்திலும் இதய துடிப்பு 210 ஆக இருப்பதாக தெரிய வந்தது. உடனடியாக மருத்துவரை சந்தித்த அவருக்கு ஏட்ரியல் அபிலேஷன் என்னும் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதே போல மார்ச் 2021 இல் முன்னாள் தடகள வீரர் பாப் மார்ச்சுக்கு இதய துடிப்பில் மாறுபாடு இருப்பதாக ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கவே அவரும் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆப்பிள் வாட்ச் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத தேவைகளில் ஒன்று என கருதிய பாப் மார்ச் தனது மனைவி லோரிக்கு 17வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ஒரு ஆப்பிள் வாட்சினை பரிசளித்தார். தொழில்நுட்பம் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் இன்றியமையாத ஒன்று. அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் அதை காட்டிலும் நன்மை பயப்பது வேறொன்றும் இல்லை. அழிவு வழியில் பயன்படுத்தினால் அதை காட்டிலும் பேராபத்தும் இல்லை.