Apple நிறுவனத்தின் Spring Loaded - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
ஆப்பிள் நிறுவனம் தனது 'Spring Loaded' நிகழ்வு குறித்த முக்கிய தகவல் ஒன்றை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Apple நிறுவனம் தனது 'Spring loaded' நிகழ்வு குறித்த முக்கிய தகவல் ஒன்றை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையின் மூத்த தலைவர் கிரெக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 20-ஆம் தேதி இணைய வழியில் நடக்கவுள்ள இந்நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் மினி மற்றும் ஐமேக் ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
So excited for this one! Only seven more days. 👀 pic.twitter.com/PVJFcESqh8
— Greg Joswiak (@gregjoz) April 13, 2021
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஸ்ப்ரிங் லோடெட் (Spring Loaded) நிகழ்வு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்வு குறித்து பல தகவல்கள் போலியாக இணையத்தில் வெளியாகிவந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

