மேலும் அறிய

New train service : தாம்பரம் டூ திருச்சிக்கு புதிய ரயில்... ராமேஸ்வரம் முதல் திருப்பதிக்கு கூடுதல் சேவை- எப்போ தெரியுமா.?

ரயில்களில் நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் தாம்பரம் முதல் திருச்சிக்கு புதிய ரயில் இயக்கப்படவுள்ளதாகவும், ராமேஸ்வரம் முதல் திருப்பதிக்கு கூடுதல் ரயில் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களில் மக்கள் கூட்டம்

நீண்ட தூர பயணம் செய்வதற்கு ரயில் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாகவே ரயில்களில் கூட்டமானது நிரம்பி வழிகிறது. அந்த வகையில் ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தாம்பரம் முதல் திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்’ ( 16808/16807)  வாரத்தில் 5 நாட்கள் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை தவிர) இயக்கப்படும். இந்த புதிய ரயில் சேவை 01 மார்ச் 2026 முதல் திருச்சிராப்பள்ளி மற்றும் தாம்பரம் ஆகிய இரு மார்க்கத்தில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்களில் பெட்டிகள் இணைப்பு

தாம்பரம் - திருச்சி ரயிலில் 2 ஏசி சேர் கார்கள், 8 சேர் கார் பயணிகள் வண்டிகள், 6 பொதுத் தர இரண்டாம் வகுப்பு வண்டிகள், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு வண்டி மற்றும் 1 லக்கேஜ்-கம்-பிரேக் வேன் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் நேர அட்டவணை (Train No.16808 – திருச்சிராப்பள்ளி முதல் தாம்பரம்)

காலை 5.35 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதரம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

ரயில் நேர அட்டவணை (Train No.16807 – தாம்பரம் முதல் திருச்சிராப்பள்ளி)

மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும். செங்கல்பட்டு,மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், மயிலாடுதுறை, சீர்காழி,தஞ்சாவூர், வழியாக திருச்சியை சென்றடைகிறது. இதே போல ஏற்கனவே ராமேஸ்வரம் - திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி - ராமேஸ்வரம் சேவை அதிகரிப்பு

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து ராமேஸ்வரம்- திருப்பதி- ராமேஸ்வரம்  எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நாட்கள் வாரத்திற்கு 3 நாட்களில் இருந்து 4 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. (ரயில் எண் 16780) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், இனி செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் எனவும் மார்ச் 3ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget