iPhone Users: ஆப்பிள் ஐபோனில் ஃபேஸ்புக்,இன்ஸ்டா பாக்குறீங்களா.... உஷாரா இருங்க..
ஆப்பிள் ஐபோனில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சமூகவலைதளங்களில் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக பலரின் சொந்த விவரங்கள் சமூக வலைதள பயன்பாட்டின் மூலம் சில சமயங்களில் திருடப்படுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதன் மூலம் தனிநபர் விவரங்கள் திருடப்படுவதாக மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஃபெலிக்ஸ் க்ராஸ் என்ற முன்னாள் கூகுள் பொறியாளர் ஒருவர் பாதுக்காப்பு குறைபாடு ஒன்றை கண்டறிந்துள்ளார். அதன்படி ஐபோன் பயனாளர்கள் தங்களுடைய ஐபோனில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தும் போது அவர்கள் விளம்பரம் அல்லது லிங்க் ஆகியவற்றை தொடும் போது இந்தப் பிரச்னை வரும் என்று குறிப்பிடுகிறார். அதாவது இந்த விளம்பரம் மற்றும் லிங்க் ஆகியவற்றை ஒருவர் தொடும் போது அது சஃபாரி ப்ரோவுசரில் திறக்காது. மாறாக அந்த செயலிகளின் இன் ஆப் ப்ரோவுசரில் திறக்கம்.
அப்போது வாடிக்கையாளர் அந்த தளத்தில் பதிவிடும் தகவல் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேகரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்த தளத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தனி நபர் விவரங்களான வங்கி கணக்கு விவரம், பாஸ்வேர்டு உள்ளிட்ட விஷயங்கள் கசிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதற்கான காரணத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதாவது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தங்களுடைய செயலியின் ப்ரோவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் கோடு ஒன்றை சேர்க்கும். அந்த கோடு மூலமாக இந்த செயலிகள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமலேயே இந்த செயலிகள் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் ஐஓஎஸில் மிகவும் எளிதாக நடைபெறும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 14.5 க்கு பிறகு இந்த முறை தகவல் திருட்டி நடைபெறும் வாய்ப்பு குறைவு என்று அவர் கூறியுள்ளார். ஏனென்றால் ஐஓஎஸ் 14.5-ல் செயலிகள் வாடிக்கையாளர்களை டிராக் செய்ய நிச்சயம் அவர்களுடைய அனுமதி முக்கியமான ஒன்று என்று மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளிப்படையாக ஒருவர் அனுமதி தராமல் அவருடைய தரவுகளை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் சேகரிக்க முடியாது.
க்ராஸின் இந்தக் கருத்திற்கு ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, “ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஜாவா ஸ்கிரிப்ட் கோடு வெறும் எங்களுடைய சேவைகளை ஒன்றிணைக்க மட்டுமே. அத்துடன் அது முன்பு எங்களுடைய வாடிக்கையாளர்களை டார்கெட் செய்து விளம்பரங்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
க்ராஸின் இந்த புதிய பாதுகாப்பு குறைபாடு அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆப்பிள் அனைத்தையும் ஒஎஸ்களுக்கும் அப்டேட் ஒன்றை அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்