இதுவரை வெளிவந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ்கள்… ஒவ்வொரு வாட்சுக்கும் அறிமுக விலை என்னென்ன?
ஒவ்வொருமுறை ஆப்பிள் வாட்ச் வெளியாகும்போதும் அதில் புதிய புதிய அம்சங்கள் கொண்டுவரப் படுகின்றன. அதற்கேற்றாற்போல் அதன் விலையும் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
எல்லா வருடமும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் வெளியிடுவது வழக்கம். அதேபோல இந்தா ஆண்டும் எதிர்பார்த்தப்படி நேற்று இரவு 10:30 மணிக்கு கோலாகளமாக இந்த விழா தொடங்கப்பட்டது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8
இந்த நிகழ்வில் முதல் சாதனமாக புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ஸ்மார்ட் வாட்ச் என்றால் இவ்வளவுதான் இருக்கும் என்ற நிலையை மாற்றும் வகையில் பல மேம்பட்ட அம்சங்களோடு ஆப்பிள் வாட்ச் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஆனது உடல் வெப்பநிலை கண்காணிப்பு, பெண்களின் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, பிரத்யேக வாகன ஓட்டுதல் பாதுகாப்பு கண்காணிப்பு என பல அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் இன் ஜிபிஎஸ் பதிப்பு ரூ.31,783 எனவும் செல்லுலார் பதிப்பு தோராயமாக ரூ.39,749 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறை ஆப்பிள் வாட்ச் வெளியாகும்போதும் அதில் புதிய புதிய அம்சங்கள் கொண்டுவரப் படுகின்றன. அடகற்கேற்றாற்போல் அதன் விலையும் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் கடந்தகால விலைகள்
- முதன் முதலில் வெளியான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 ஆனது, செப்டம்பர் மாதம் 2016ல் லான்ச் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 21 ஆயிரமாக இருந்தது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 ஆனது, டிசம்பர் மாதம் 2016ல் லான்ச் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 34 ஆயிரமாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்: கோவையில் ஒரே அறையில் கதவின்றி கட்டப்பட்ட 2 கழிவறைகள் - நெட்டிசன்கள் விமர்சனம்
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் என்று வெளியானது. இது செப்டம்பர் மாதம் 2017ல் லான்ச் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 22 ஆயிரமாக இருந்தது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஆனது, செப்டம்பர் மாதம் 2018ல் லான்ச் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 40,900 ஆக இருந்தது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஆனது, வழக்கம் போல செப்டம்பர் மாதம் 2019-இல் லான்ச் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 43,900 ஆக இருந்தது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 ஆனது, 2020 செப்டம்பர் மாதம் லான்ச் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 69,900 ஆக இருந்தது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஆனது, 2021 செப்டம்பர் மாதம் லான்ச் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 41,900 ஆக இருந்தது.
- அதே போல இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்புகள்
எப்போது ஆப்பிள் வெளியிட்டாலும் பெரும் வரவேற்பை பெரும் என்றாலும், கடந்த வருடத்தில் நாம் அதிகம் கேட்ட செய்தியாக ஆப்பிள் வாட்சால் உயிர் பிழைத்த செய்திகள் மக்கள் மனதில் ஆப்பிள் வாட்சை இன்னும் அவசியமானதாக மாற்றி உள்ளது. இதயத்தை கண்காணிக்கும் வசதி உள்ளதால் ஆப்பிள் வாட்ச் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது புதிய அப்டேட்டில் விபத்தை கண்காணிக்கும் வசதியும் இருப்பதால் மேலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டது. ப்ரி புக்கிங் தொடங்கும் போது ஒரு புதிய சாதனை படைக்கும் என்று இப்போதே கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்