Android 12 | இந்த லிஸ்ட்ல உங்க போன் இருக்கா? உங்களுக்கும் கிடைக்கும் அசத்தலான ஆண்ட்ராய்ட் 12!
ஆண்ட்ராய்ட் 11 நடைமுறையில் இருக்கும் நிலையில் பல்வேறு அப்டேட்களை கொண்ட ஆண்ட்ராய்ட் 12ஐ கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
இணைய உலகின் ராஜாவான கூகுள் புதுப்புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் பிரைவசியை பொருத்தே கூகுளின் அப்டேட்கள் இருக்கும். இந்த நிலையில் கூகுள் நேற்று தனது புது அம்சங்களை உலகுக்கு அறிமுகம் செய்தது. கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை கூகுளின் புது அம்சங்கள் குறித்து பேசினார். லாங்குவேஜ் ட்ரான்ஸ்லேஷன், WearOS அறிமுகம், கூகுள் மேப்பில் அப்டேட் என பல வசதிகளை கொண்டு வந்தது. குறிப்பாக முக்கிய அறிவிப்பாக இருந்தது ஆண்ட்ராய்ட் 12.
தற்போது ஆண்ட்ராய்ட் 11 நடைமுறையில் இருக்கும் நிலையில் பல்வேறு அப்டேட்களை கொண்ட ஆண்ட்ராய்ட் 12ஐ கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இது இப்போதே அனைவருக்கும் கிடைக்காது. ஒரு சோதனையாக பீட்டா வெர்ஷனில் மட்டுமே இந்த ஆண்ட்ராய்ட் 12 அறிமுகமாகும். அதன் வரவேற்பை பொருத்தும், குறைகள் கண்டறியப்பட்டால் சரிசெய்யப்பட்டும் இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைவரின் ஸ்மார்ட்போன்களையும் ஆண்ட்ராய்ட் 12 அலங்கரிக்கும்.
தற்போதைக்கு Google Pixel 3, Pixel 3 XL, Pixel 3A, Pixel 3A XL, Pixel 4, Pixel 4 XL, Pixel 4A, Pixel 4A 5G, மற்றும் Pixel 5 ஆகியவற்றில் Android 12 Beta 1 டவுன்லோட் செய்துகொள்ளலாம். பின்னர் Settings > System > System Update கொடுத்தால் உங்களுக்கு ஆண்ட்ராய்ட் 12 பீட்டா வெர்ஷன் கிடைக்கப்பெறும். புதிய ஆண்ட்ராய்ட் உங்கள் போனில் கிடைக்க சிறுது நேரம் எடுக்கலாம்.
உங்களிடம் கூகுள் போன் இல்லாவிட்டாலும், சில போன் நிறுவனங்களுக்கும் இந்த அப்டேட்டை கொடுத்துள்ளது கூகுள்.
ஆசுஸ் சென்போன் 8, ஒன்ப்ளஸ் 9, ஒன்ப்ளஸ் 9 ப்ரோ, ஓபோ ஃபைண்ட் x3 ப்ரோ, டிசிஎல் 29 ப்ரோ 5ஜி, டெக்னோ கெமான் 17, Mi 11,Mi 11 அல்ட்ரா, Mi 11i, Mi 11Xப்ரோ, ரியல்மி ஜிடி, ZTE அக்ஃசான் 30 அல்ட்ரா 5G ஆகிய செல்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்ட் 12 கிடைக்கும். வால்பேப்பரில் அப்டேட், கலர் கரெக்ஷன், வால் பேப்பருக்கு ஏற்ப செல்போனின் மொத்த தீம் கலரும் மாறுதல், லாக் ஸ்கிரீன், வால்யூம், நோட்டிபிகேஷன் என பலவற்றிலும் அப்டேட் கிடைக்கும். புதிய வகையான அனிமேஷன்கள் கிடைக்கும். உங்கள் போனை லாக் செய்துவிட்டு மீண்டும் அன்லாக் செய்தால் புதிய வகை அனிமேஷன் கிடைக்கப்பெறும். ஆண்ட்ராய்ட் 12 மூலம் உங்களது ஆண்ட்ராய்ட் போனில் இருந்து ஆண்ட்ராய்ட் டிவியை இன்னும் எளிதாக இயக்கலாம். ஆண்ட்ராய்ட் 12 உங்களது போனை அதிவேகமாக்கும் என்றும், பேட்டரி சார்ஜை அதிகம் ட்ரை செய்யாது என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.
>> உங்க டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பா இருக்கணுமா? இந்த 5 விஷயங்களை கவனிங்க போதும்..