Amazon Great Indian Festival | நாளை விற்பனைக்கு வரும் Samsung galaxy M52 5G! என்னென்ன எதிர்பார்க்கலாம்..!
samsung galaxy M52 5G மிகவும் எடை குறைந்த மொபைல்ஃபோனாக இருக்கும் என்றே சாம்சங் நிறுவனம் இதை குறிப்பிடுகிறது.
பிரபல சாம்சங் (samsung) நிறுவனம் தனது அடுத்த மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கவுள்ள Amazon Great Indian Festival Sale ஐ முன்னிட்டு , சில தினங்களுக்கு முன்னதாகவே விற்பனைக்கு வரவுள்ளது. பிரபல samsung நிறுவனம் கடந்த ஆண்டு samsung galaxy M51 என்ற மொபைல்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கடந்த வாரம் தனது புதிய மாடலான samsung galaxy M52 5G மொபைலை கடந்த வாரம் அமேசான் தளத்தில் அறிமுகப்படுத்தியது. இது வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் amazon தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. Amazon Great Indian Festival Sale LIVE Now! https://amzn.to/3Fe1W0u
samsung galaxy M52 5G வசதிகள் :
samsung நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் அடிப்படையில் samsung galaxy M52 5G ஆனது 7.4mm அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Samsung galaxy M52 5G மிகவும் எடை குறைந்த மொபைல்போனாக இருக்கும் என்றே சாம்சங் நிறுவனம் இதை குறிப்பிடுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளீட்டு சேமிப்பு வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று பின்பக்க கேமரா வசதிகள், (64 மெகா பிக்சல் பிரைமரி சென்சார், 12 மெகா பிக்சல் அல்ட்ரா ஒயிட் சென்சார், 12 மெகா பிக்சல் மேக்ரோ சென்சார் ) , 32 மெகா பிக்சல் முன்பக்க ஹோல் பஞ்ச் கேமரா வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஃபிங்கர் பிரிண்ட் தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் 6.7-inch அளவிலாம full-HD திரை மற்றும் 1,080x2,400 அளவிலாம பிக்சல் ரெசலுயூசன் வசதிகளை கொண்ட FHD+sAMOLED திரையை கொண்டுள்ளது.இது பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்குமாம். 120Hz அளவுலான ரெஃப்ரஸ் ரேட் மற்றும் 20:9 அளவிலான அஸ்பக்ட் ரேஷியோ வசதிகளும் இதில் இடம்பெறும் என தெரிகிறது.Snapdragon 778G புராசஸருடன் ஆண்ட்ராய்ட் 11 இயங்குதள வசதிகளுடனும் களமிறங்கியுள்ளது. knox பாதுகாப்பு வதிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ப்ளூடூத், வைஃபை, வேகமாக சார்ஜிங் செய்வதற்கான USB Type-C port வசதி உள்ளிட்டவைகளும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிவற்றிற்கான வசதிகளும் samsung galaxy M52 5G மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.
Samsung galaxy M52 5G விலை:
Samsung galaxy M52 5G விலை அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் 8 GB ரேம் மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகொண்ட மொபைலானது கிட்டத்தட்ட 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகலாம் என கூறப்படுகிறது. மேலும் கருப்பு, ஊதா, வெள்ளை என்ற மூன்று நிறத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.