![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AMAZON PRIME DAY | ஆஃபர் மழையில் நனைய தயாரா! - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான் ப்ரைம் டே.. !
இந்த ஆஃபர் முற்றிலும் ப்ரைம் வாடிக்கையாளருக்கானது. இதனை சாதாரண வாடிக்கையாளர்கள் பெற இயலாது
![AMAZON PRIME DAY | ஆஃபர் மழையில் நனைய தயாரா! - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான் ப்ரைம் டே.. ! Amazon announces dates of Prime Day Sales 2021 in India targets youngsters AMAZON PRIME DAY | ஆஃபர் மழையில் நனைய தயாரா! - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான் ப்ரைம் டே.. !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/11/c8ca8ad09252713e8efd94143b9e4ec2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்கான பிரைம் நாள் விற்பனை (prime day sale )தேதியை அறிவித்துள்ளது. ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான இந்த ஆஃபர் வருகிற ஜூலை 26-ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கி 27-ஆம் தேதி நள்ளிரவு முடிவடைகிறது. இதில் மொபைல்ஃபோன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் , ஆடைகள், ஃபர்னிச்சர்ஸ், அமேசான் சாதனங்கள் என அனைத்திலும் விலை சலுகைகளை எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட 300 புதிய பொருட்கள் ப்ரைம் டே அன்று அறிமுகமாக உள்ளன. கொரோனா சூழல் காரணமாக நடுத்தர மற்று சிறு குறு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதால் , அவர்களையும் கருத்தில் கொண்டு இந்த விற்பனையை தொடங்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்த அமேசான் ப்ரைம் டே ஆஃபரானது 18 வயது முதல் 24 வயதிலான இளைஞர்களை வெகுவாக கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
This #AmazonPrimeDay, dive to discover the joy of great deals, blockbuster entertainment and new launches.
— Amazon India (@amazonIN) July 10, 2021
Join Prime Now https://t.co/CLIprzyNoI pic.twitter.com/RGeq9dmpph
ப்ரைம் வாடிக்கையாளர் :
இந்த ஆஃபர் முற்றிலும் பிரைம் வாடிக்கையாளருக்கானது. இதனை சாதாரண வாடிக்கையாளர்கள் பெற இயலாது. பிரைம் வாடிக்கையாளராக விரும்புவோர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தி பிரைம் மெம்பர்ஷிப்பை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பிரைம் வீடியோ உள்ளிட்ட அமேசானின் பிற சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். அதிக தொகை செலுத்த விரும்பாதவர்கள் மாதம் 129 ரூபாய் மற்றும் மூன்று மாதங்களுக்கு 329 ரூபாய் என்ற அடிப்பைடையிலும் ப்ரைமை பெற்றுக்கொள்ளலாம். அமேசான் தற்போது 22 நாடுகளில் கிட்டத்தட்ட 200 மில்லியன் பிரைம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ரைம் டே மொபைல் ஆஃபர் :
மொபைல் போன்களை பொருத்தவரை விற்பனைக்கு முன்னதாகவே மொபைல்போன் சலுகைகள் குறித்த விவரங்களை அமேசான் வெளியிட்டுள்ளது. இது தவிர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில மொபைல் போன்களிலும் ஆஃபர்களை வழங்க உள்ளது அமேசான். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஜி மொபைல் போன் ரூ 22,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பிரைம் டே தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். இது தவிர ஐபோன் 11 , ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி, ரெட்மி நோட் 10 எஸ், ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ், மற்றும் , ரெட்மி நோட் 10 ஆகிய மொபைல்போன்களும் தள்ளுபடியில் கிடைக்கும். இதே போலா மிட் ரேஞ்ச் மொபைல் போன்களான iPhone 12 Pro, Samsung Note 20, Mi 11x 5G மற்றும் Mi 10i 5G போன்ற மொபைல் போன்களிலும் ஆஃபரை எதிர்பார்க்கலாம்.
வங்கி சலுகைகள் :
அமேசானை பொருத்தவரையில் cash on delivery-ஐ விரும்பாத வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் , சில வங்கி சலுகைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் 10% HDFC வங்கி ஆஃபரை மொபைல்போன்களுக்கு வழங்குகிறது. NO COST EMI , பழைய மொபைல்கள் எக்சேஞ்ச் வசதி உள்ளிட்ட வழக்கமான சலுகைகளும் இடம்பெறும். ப்ரைம் டே ஆஃபர் குறித்த மேலும் விவரங்களை அமேசான் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)