ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆப்பிளுடன் இணையும் ஏர்டெல்..ஆப்பிள் டிவி+ கண்டு மகிழலாம்.!
ஆப்பிள் நிறுவனத்துடன், ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் டிவி+ வீடியோ மற்றும் ஆப்பிள் மியூசிக்கை அணுக முடியும்

Chennai, பிப்ரவரி 24, 2025: மிகவும் புகழ்பெற்றுள்ள ஆப்பிள் டிவி+ ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் ஆப்பிள் மியூசிக்கை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருவதற்காக பாரதி ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பார்ட்னர்ஷிப்பில் நுழைந்துள்ளன.
ஏர்டெல் வைஃபை:
ரூ.999 என்ற ஆரம்பக் கடணத்தில் தொடங்கும் திட்டங்களில் உள்ள அனைத்து வீட்டு வைஃபை வாடிக்கையாளர்களும் ஆப்பிள் டிவி+ இன் கவர்ச்சிகரமான உள்ளடக்கத்தை அணுகலாம். அதுமட்டுமல்லாமல் பயணத்தின்போது பல சாதனங்களில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் விருப்பத்தேர்வும் கிடைக்கும்.
ஏர்டெல் போஸ்ட்பெய்டு
மேலும் ரூ.999 என்ற ஆரம்பக் கட்டணத்தில் இருந்து தொடங்கும் திட்டங்களில் உள்ள போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ஆப்பிள் டிவி+ அணுகலைப் பெறுவார்கள். அதற்கும் மேலாக இந்தியா மற்றும் உலகளாவிய இசையின் பரந்த பட்டியலைக் கொண்ட 6 மாத இலவச ஆப்பிள் மியூசிக்கையும் பெற்று மகிழலாம்.
ஆப்பிள் நிறுவனத்துடனான இந்த உத்தி சார்ந்த பார்ட்னர்ஷிப் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பார்க்கத் தூண்டும் நாடகம் மற்றும் நகைச்சுவைத் தொடர்கள், திரைப்படங்கள், புதுமையான ஆவணப்படங்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கான தனிப்பட்ட அணுகலைப் பெறமுடியும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் மியூசிக்கை ஆங்கிலம், இந்தி உள்ளிட பல மொழிகளில் கேட்கலாம்.
பார்ட்னர்ஷிப்
இது குறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்ததாவது, "ஆப்பிளுடனான ஒரு மாற்றத்தை உருவாக்கும் பார்ட்னர்ஷிப்பை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதன் மூலம் மிகவும் பாராட்டப்படும் வீடியோ மற்றும் இசை உள்ளடக்கத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கென கொண்டு வருகிறோம். எங்களுடைய லட்சக்கணக்கான வீட்டு வைஃபை மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த ஒத்துழைப்பு ஓர் அசாதாரண வாய்ப்பை வழங்குகிறது. ஆப்பிளின் பிரீமியம் உள்ளடக்கப் பட்டியலை அணுக இது அவர்களுக்கு உதவுகிறது.
அனைத்து ஆப்பிள் TV+ அசல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கான விளம்பரமில்லா அணுகலை இந்த பார்ட்னர்ஷிப் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழ முடியும், மேலும் "Ted Lasso," "Severance," "The Morning Show," "Slow Horses" "Silo," "Shrinking" மற்றும் "Disclaimer" போன்ற உலகளாவிய விருது பெற்ற வெற்றித் தொடர்கள் மற்றும் "Wolfs" மற்றும் "The Gorge" போன்ற சமீபத்திய திரைப்படங்களையும் காணலாம்.
6 மாதங்கள் இலவசம்
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் விருது பெற்ற ஆப்பிள் மியூசிக்கை 6 மாதங்களுக்கு இலவசமாகப் பெறலாம். இது இந்திய மற்றும் உலகளாவிய இசையின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றாகும். நிபுணத்துவத்துடன் தொகுக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள், கலைஞர் நேர்காணல்கள், ஆப்பிள் மியூசிக் ரேடியோ மற்றும் ஆப்பிள் மியூசிக் சிங் மற்றும் டைம்-சின்ஸ்டு பாடல் வரிகள் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ மற்றும் இமெர்சிவ் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அற்புதமான அம்சங்களை இது வழங்குகிறது என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.