குறைந்த விலையில் சிறந்த ஏர்கூலர் வாங்க வேண்டுமா? இதையெல்லாம் கவனிச்சுக்கோங்க!!
இந்த கோடையில் சில்லென இருக்க ஒரு சிறந்த தேர்வை நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டின் அறைகளுக்கான சிறந்த ஏர் கூலர்களின் பட்டியலை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.
கோடை காலம் தொடங்க போகிறது என்று கூறினாலே நமக்கு அச்சத்தை தருவது வெயில்தான். வெயில் காரணமாக இரவில் ஏற்படும் வெட்கையினால் நாம் நிம்மதியாக உறங்க முடியாதது, அதே நேரத்தில் நாம் நிம்மதியாக உறங்குவதற்கு அதிக விலை கொடுத்து ஏசி வாங்க வேண்டும் என்ற பயம் போன்றவை நம்மை கோடை காலத்திற்கு முன்பாகவே உறங்கவிடாமல் செய்யும். நடுத்தர மக்களுக்கு ஏசி சாத்தியமானது இல்லை. இதிலிருந்து விடுபட நமக்கு ஒரே ஒரு தீர்வு ஏர்கூலர். தற்போது கோடை காலமும் தொடங்கி விட்டது, பல நிறுவனங்கள் விலையை குறைத்து ஆஃபர் விலையில் ஏர் கூலர்கள் விற்கவும் செய்கின்றனர். ஏர்கூலர்கள் பொதுவாக வெயில் காலத்தில் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் பயனுள்ளதாக இருக்கின்றது.
அந்த வகையில் குறைந்த விலையிலான ஏர் கூலர்கள் எங்கு கிடைக்கும் என்று நாம் தேடுவது உண்டு. ஏப்ரல் மாதம் துவங்கப்போகும் இந்த நேரத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்க துவங்கிவிட்டது. இந்த கோடையில் சில்லென இருக்க ஒரு சிறந்த தேர்வை நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டின் அறைகளுக்கான சிறந்த ஏர் கூலர்களின் பட்டியலை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். இதில், 100 லிட்டர் வரை நீர் சேமிப்பு தொட்டி மற்றும் மிகப்பெரிய காற்று வீசும் திறன் ஆகியவைக் கிடைக்கும். 650 சதுர அடி வரை பெரிய அறைகளின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இவை சிறந்த தேர்வாக இருக்கும். தற்போது பெரும் தள்ளுபடியில் அமேசானில் இந்த ஏர்கூலர்கள் கிடைக்கின்றன air cooler price. மேலும் இந்த ஏர் கூலர்களை நீங்கள் தற்போது இன்வெர்ட்டர் மூலமாகவும் இயக்கலாம்.
- கிராம்ப்டன் ஓசோன் டெசர்ட் ஏர் கூலர் - இது 42% ஆஃபரில், ரூ. 9,999 க்கு கிடைக்கிறது.
- பஜாஜ் டிசி 55 டீலக்ஸ் டெசர்ட் ஏர் கூலர் - இது 28% ஆஃபரில், ரூ. 8,799 க்கு கிடைக்கிறது.
- வோல்டாஸ் கிராண்ட் 72 டெசர்ட் கூலர் - இது 33% ஆஃபரில், ரூ. 10,000 க்கு கிடைக்கிறது.
- ஹேவல்ஸ் சீலியா டெசர்ட் ஏர் கூலர் - இது 28% ஆஃபரில், ரூ. 12,790 க்கு கிடைக்கிறது.
- பஜாஜ் பிஎக்ஸ் 97 டார்க் (HC) 36லி பெர்சனல் ஏர் கூலர் - இது 32% ஆஃபரில், ரூ. 5,964 க்கு கிடைக்கிறது.
- சிம்ஃபோனி சுமோ 75 எக்ஸ்எல் டெசர்ட் ஏர் கூலர் - இது 11% ஆஃபரில், ரூ. 12,040 க்கு கிடைக்கிறது.
- கென்ஸ்டார் வேவ்55 50 லிட்டர் பெர்சனல் ஏர் கூலர் - இது 26% ஆஃபரில், ரூ. 6,859 க்கு கிடைக்கிறது.
- கிராம்ப்டன் ஆப்டிமஸ் டெசர்ட் ஏர் கூலர் - இது 38% ஆஃபரில், ரூ. 11,999 க்கு கிடைக்கிறது.
- ஹின்ட்வேர் இன்வெர்ட்டர் கம்பேட்டிபுள் டெசர்ட் ஏர் கூலர் - இது 32% ஆஃபரில், ரூ. 10,199 க்கு கிடைக்கிறது.