Air Conditioner: இனி 5 இல்ல.. 4 ஸ்டார்தான்..! ஏசி ஸ்டார் ரேட்டிங்கில் வருது மாற்றம்.. விலையும் ஏறுது!!
ஏ.சி. எனர்ஜி ரேட்டிங்கில் அறிமுகமாகும் புதிய வழிக்காட்டு நெறிமுறைகள்; ஏ.சி.யின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாதன பொருட்களின் அதன் ஆற்றல் திறனைக் கொண்டே அளவிடப்படுகின்றன. இது ஏ.சி.க்கு மிகவும் பொருந்தும். ஏ.சி.-யில் ஸ்டார் ரேட்டிங்கில் மாற்றம் கொண்டு வர இந்தாண்டு ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டது. இது இனிவரும் காலங்களில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், இதனால் ஏ.சி.-யின் விலை உயரும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏ.சி.-யின் ஆற்றலுக்கு தகுந்தவாறு வழங்கப்படும் ஸ்டார் ரேட்டிங்கிற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்த மாதம் நீங்கள் வாங்கிய 5 ஸ்டார் ஏ.சி.யின் அதே மாடல், 4 ஸ்டாராக ரேட்டிங் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏ.சி. உற்பத்திக்கான மூலதன விலையை அதிகரிக்கும் என்பதால், வரும் மாதங்களில் ஏ.சி.யின் விலையும் 7 முதல் 10 சதவீதம் வரை விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏ.சி. உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் இந்த ஸ்டார் ரேட்டிங் கட்டுபாடுகள் இது ஃபிரிட்ஜிற்கும் பொருந்தும் என்றும், ஸ்டார் ரேட்டிங்கில் மாறுதல்கள் செய்யப்படுவதால் அதன் விற்பனை விலையும் அதிகரிக்கும்.
புதிதாக மாறப்பட்ட உள்ள எனர்ஜி ரேட்டிங் மின்சாதனத்தின் ஆற்றல் திறனை 20 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இது உற்பத்தி விலையிலும் பிரதிபலிக்கும். இதுவரை தயாரிக்கப்பட்டுள்ல பழைய ஸ்டார் ரேட்டிங் கொண்டது 6 மாத காலமாக ஸ்டாக் உள்ளதாகவும், அதனால் புதிய நடைமுறையை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும். இனி வரும் காலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏ.சி. புதிய ஸ்டார் ரேட்டிங் நடைமுறையை பின்பற்றி இருக்கும் என்றும் மின்சாதான உற்பத்தியாளரான கமல் நந்தி தெரிவித்துள்ளார்.
வரும் 2025 இல் ஏசிக்கான மதிப்பீட்டு விதிமுறைகளில் அடுத்தடுத்த மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது.
லாயிட் நிறுவனத்தின் மொத்த விற்பனைத் தலைவர் ராஜேஷ் ரதி, ஆற்றல் விதிமுறைகளை மேம்படுத்துவதால், சமைக்கப்படாத பொருட்களின் உற்பத்திக்கான விலை யூனிட் ஒன்றுக்கு சுமார் ₹2,000-2,500 வரை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். " விலை உயரும் அதே வேளையில், நுகர்வோர்கள் ஒரு சிறந்த ஆற்றல் மிக்க பொருட்களை பெறுவார்கள். இந்த புதிய நடைமுறைகளால் இந்தியாவின் எரிசக்தி விதிமுறைகளை உலகளவில் சிறந்த ஒன்றாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்