5G ஏலம்: 32% வட்டியினை அரசாங்க பங்காக மாற்றும் வோடஃபோன், ஐடியா
5G ஏலத்திற்கு முன்னர், வோடஃபோன் ஐடியா நிறுவனம், சரிசெய்யப்பட்ட நிலுவைத்தொகை (AGR) மற்றும் ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகைக்கான 32% வட்டியினை அரசாங்கப் பங்குகளாக மாற்றிட முடிவு செய்திருக்கிறது.
5G ஏலத்திற்கு முன்னர், அதாவது ஜூலை 26க்கு முன்னர், வோடஃபோன் ஐடியா நிறுவனம், சரிசெய்யப்பட்ட நிலுவைத்தொகை (AGR- Adjusted Gross Revenue) மற்றும் ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகைக்கான 32% வட்டியினை அரசாங்கப் பங்குகளாக மாற்றிட முடிவு செய்திருக்கிறது.
வட்டியினை அரசாங்கப் பங்குகளாக மாற்றுவது குறித்து ஏற்கன்வே 2021 செப்டம்பரில் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய வட்டியின் நிகர மதிப்பு (NPV - Net Present Value) இந்திய ரூபாயில் சுமார் 16,133 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்குகள் மாற்றம் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நடைபெறூம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
இன்னும் 20ஆயிரம் கோடி
இது குறித்து வோடஃபோன் ஐடியாவின் நிர்வாக இயக்குனர், ரவீந்தரநாத் தக்கர் கூறியிருப்பதாவது, ஏலத்திற்கு முன்னர் மூன்று விதமான நிதியினை நிர்வாகம் திரட்ட வேண்டும். அவை, விளமபரதாரர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு முதலீட்டாளர்கள் அல்லது புதிய முதலீட்டாளர்கள். இதில் விளம்பரதாரர்களின் பணம் ஏற்கனவே வந்துவிட்டது. அவர்கள் ரூபாய் 4500 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த தொகை இல்லாமல் இருபதாயிரம் கோடி தேவைப்படுகிறது. இதனை கடன் வழங்குபவர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட இருக்கிறோம். அதிலும், பத்தாயிரம் கோடி முதலீடாகவும் பத்தாயிரம் கோடி கடனாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதுவும் அடுத்த இரண்டு வாரங்களில் அரசாங்கம் வட்டியினை முதலீடாக மாற்றிக் கொண்டதற்குப் பிறகு புதிய முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், வோடஃபோன் ஐடியா நிறுவனம், எப்போதுமே கடன் வழங்கியவர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களிடம் நல்ல உறவினையே கொண்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரிடமிருந்தும் நிதி திரட்டுவது என்பது கடினமாக இருக்காது எனவும் ரவீந்தரநாத் தக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் 4G தளங்களை விரிவு படுத்துவதில் எங்களின் போட்டியாளர்களை விட நாங்கள் பின் தங்கி விட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கு தரவேண்டிய 90% கடனை தந்த பிறகு, நிர்வாகத்தின் செயல்பாடு மற்றும் முதலீடுகள் சீராக இருக்கும் எனவும் நிர்வாக இயக்குனர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.
செபி-ன் படி
அரசாங்கத்தின் பங்கு 25%க்கும் அதிகமாக இருக்கும் என்பதால், இதனைவிட அதிகமாக 26%க்கு திறந்த சலுகையினை வழங்குவதில் இருந்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து விலக்கு பெற வேண்டும் என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். செபி விதிமுறைகளின் படி, 25% மற்றும் அதற்கு அதிகமான பங்குகளின் உரிமையைப் பெறுவது என்பது நிறுவனத்தின் பங்கில் 26% சலுகைகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இதனால் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் இனி விளப்பரதாரர்களுக்கானதாக இருக்காது எனவும், பங்குகள் அனைத்தும் பொதுப் பங்குகளாக இருக்கும் எனவும் அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.