WWE Hell in a Cell 2021: ரெஸ்ட்லிங் ரசிகர்களே, இத கவனிச்சீங்களா? எல்லாம் மாறிப்போச்சு!
இப்பொழுதும், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கேயாவது ரெஸ்ட்லிங் சம்பந்தப்பட்ட மீம்ஸ்கள், புகைப்படங்களை காண நேரிட்டால், நிச்சயம் அவை நோஸ்டால்ஜியாவை கிளறிவிடும்.
90s கிட்ஸ் ரெஸ்ட்லிங் ரசிகர்களுக்கு தெரியும், “ரா” “ஸ்மாக் டவுன்” “ரெஸ்ட்லமேனியா” என்பதெல்லாம் விளையாட்டு நிகழ்ச்சிகள் இல்லை, அவையெல்லாம் பள்ளிப்பருவங்களை புரட்டிப்போடும் எமோஷன்ஸ்.
பள்ளி, கல்லூரி காலம் வரை ரெஸ்ட்லிங்கை தொடர்ந்து ஃபாலோ செய்ய முடிந்தவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல், ஃபாலோ செய்ய முடியாமல் போயிருக்கலாம். இன்னும் சில பேர், அலுவலகங்கள் மாறினாலும், வயதானாலும் ரெஸ்ட்லிங் போட்டிகள் குறித்த அப்டேட்டுகளை தெரிந்து கொண்டும் உள்ளனர்.
இப்பொழுதும், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கேயாவது ரெஸ்ட்லிங் சம்பந்தப்பட்ட மீம்ஸ்கள், புகைப்படங்களை காண நேரிட்டால், நிச்சயம் அவை நோஸ்டால்ஜியாவை கிளறிவிடும்.
ரெஸ்ட்லமேனியா, ராயல் ரம்பிள், சம்மர் ஸ்லாம், நோ வே அவுட் வரிசையில் “ஹெல் இன் எ செல்” சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம். கொரோனா பரவலால், இந்த ஆண்டு நடைபெற இருந்த ”ஹெல் இன் எ செல்” நிகழ்ச்சி ரசிகர்கள் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. எனினும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்த “விர்ச்சுவல்” முறையில் கனெக்ட்டான ரசிகர்கள் அரங்கம் முழுக்க நிரம்பி இருந்தனர்.
பாபி லஷ்லி vs ட்ரியூ மெக்கிண்டையர்
அடைப்பட்ட கூண்டுக்குள் தப்பிக்க வழியில்லாமல் சண்டை போடுவதுதான் ஹெல் இன் எ செல். சண்டை போடுபவர்களுக்கும் சண்டையை பார்ப்பவர்களுக்கும் மரண பயத்தை தரும் இந்த ஹெல் இன் எ செல் வரலாற்றில் பல முக்கிய போட்டிகளை பட்டியலிடலாம்.
They walked into #HellInACell as champs. They left #HIAC as champs.
— WWE Network (@WWENetwork) June 21, 2021
cc: @fightbobby @BiancaBelairWWE pic.twitter.com/roD1Vzf6JF
ட்ரிப்பிள் எச், அண்டர்டேக்கர், எட்ஜ், பிராக் லெஸ்னர் என முன்னணி ரெஸ்ட்லர்களின் போட்டிகள் மரண பயங்கரம் ரகம். இந்த வரிசையில், இப்போது உள்ள ரெஸ்ட்லர்கள் உலக அளவிலான ரசிகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமாக இருப்பதில்லை.
தற்போது WWE சாம்பியனாக இருக்கும் பாபி லஷ்லி, ட்ரியூ மெக்கிண்டையரை எதிர்கொண்டார். ரத்தமும் அடியுமாக சென்ற இந்த போட்டியின் முடிவில், பாபி லஷ்லி வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் WWE சாம்பியன்ஷிப் டைட்டிலை பாபி லஷ்லி தக்க வைத்துள்ளார்.
மற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்:
WWE மகளிர் டேக்-டீம் சாம்பியன்ஷிப்: மண்டி ரோஸை நடாலியா வென்றார்
No more chances for @DMcIntyreWWE.#HIAC @fightbobby @The305MVP pic.twitter.com/GXMk4JmnSQ
— WWE (@WWE) June 21, 2021
கிக் ஆஃப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்:
செசாரோவை சேத் ரோலின்ஸ் வென்றார்
ஷைனா பாஸ்லரை அலெக்சா ப்ளிஸ் வென்றார்
கெவின் ஒவென்ஸை சமி சையன் வென்றார்
ஸ்மாக் டவுன் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி: பெயிலியை பியான்கா பெலேர் வென்றார்