Wrestling Championship 2021: ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 6 பதக்கங்களுடன் டாப் ஐந்தில் இந்தியா
1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் ஆண்களுக்கான ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நிறைவு செய்துள்ளது.
சர்வதேச ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 16-ம் தேதி தொடங்கிய இந்த தொடர், 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 18 முதல் 20 வயதுடைய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். இதில், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் ஆண்களுக்கான ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நிறைவு செய்துள்ளது.
இந்திய அணி சார்பில், 61 கிலோ எடைப்பிரிவில் ரவிந்தர் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதே போல, 74 கிலோ எடைப்பிரிவில் யாஷ், 79 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் பலியான், 92 கிலோ எடைப்பிரிவில் ப்ருத்விராஜ் பாட்டீல், 97 கிலோ எடைப்பிரிவில் தீபக், 125 கிலோ எடைப்பிரிவில் அனிருத் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
Indian Men's Freestyle campaign finishes with 6️⃣ medals at World Junior Wrestling Championships, Ufa 2021
— SAIMedia (@Media_SAI) August 18, 2021
🥈 61kg Ravinder
🥉 74kg Yash
🥉 79kg Gourav Baliyan
🥉 92kg Pruthviraj Patil
🥉 97kg Deepak
🥉 125kg Anirudh Kumar pic.twitter.com/xJiYliSZDU
178 புள்ளிகளுடன் ஈரான் முதல் இடத்திலும், 142 புள்ளிகளுடன் ரஷ்யா இரண்டாம் இடத்திலும், 129 புள்ளிகளுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும், 122 புள்ளிகளுடன் அசர்பைஜான் நான்காம் இடத்திலும், 101 புள்ளிகளுடன் இந்தியா ஐந்தாவது இடத்திலும் நிறைவு செய்துள்ளனர்.
#WrestleUfa Team Title Scores 🏆
— United World Wrestling (@wrestling) August 18, 2021
🥇Iran 🇮🇷 - 178 points
🥈Russia 🇷🇺 - 142 points
🥉USA 🇺🇸 - 129 points
4th Azerbaijan 🇦🇿 - 122 points
5th India 🇮🇳 - 101 points pic.twitter.com/0tCHjNwhTn
இதற்கு முன்பு, 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீபக் பூனியா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அவர், இந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவினார். சர்வதேச ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றது, அடுத்து சீனியர் சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்பதற்கான பயிற்சியாக அமைந்துள்ளது.
Also read: டி-20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு ; இந்தியா, பாக்., மோதும் நாள் இதுதான்!