மேலும் அறிய

T20 World Cup 2021 Schedule: டி-20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு ; இந்தியா, பாக்., மோதும் நாள் இதுதான்!

சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ள 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க உள்ளது.  இந்நிலையில், டி-20 உலககோப்பைக்கான அட்டவனை வெளியாகியுள்ளது. 

இது குறித்து ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 மார்ச் மாத முடிவில், சர்வதேச டி-20 தரவரிசை பட்டியலின் அடிப்படையில் டி-20 உலகக்கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், க்ரூப் 1 மற்றும் 2 என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர்.

சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.

இது தவிர, முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முதல் சுற்றில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். 

க்ரூப்:  ஏ இலங்கை, ஐயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா

க்ரூப்: பி வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன்.

இந்நிலையில், க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்தியா vs பாகிஸ்தான் அக்டோபர் 24, மாலை 6 மணி, துபாய்
இந்தியா vs நியூசிலாந்து அக்டோபர் 31, மாலை 6 மணி, துபாய்
இந்தியா vs ஆப்கானிஸ்தான் நவம்பர் 3, மாலை 6 மணி, அபு தாபி
இந்தியா vs பி1 நவம்பர் 5, மாலை 6 மணி, துபாய்
இந்தியா  vs ஏ2 நவம்பர் 8, மாலை 6 மணி, துபாய்

இதில், பி1 மற்றும் ஏ2 என குறிப்பிடப்பட்டுள்ள அணிகள் இன்னும் முடிவாகவில்லை. முதல் சுற்றுப்போட்டிகளின் முடிவில் சூப்பர் 12 பிரிவுக்கு தேர்வாகும் அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கும். 

மேலும், அபுதாபியில் நடக்க இருக்கும் முதல் அரை இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதியும், இரண்டாவது அரை இறுதிப்போட்டி துபாயில், நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
Tamilnadu Roundup: திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Trump Warns Iran: “எங்கள தாண்டி அவங்கள தொடுங்கடா பார்ப்போம்“; ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்த ட்ரம்ப்
“எங்கள தாண்டி அவங்கள தொடுங்கடா பார்ப்போம்“; ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்த ட்ரம்ப்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
Tamilnadu Roundup: திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Trump Warns Iran: “எங்கள தாண்டி அவங்கள தொடுங்கடா பார்ப்போம்“; ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்த ட்ரம்ப்
“எங்கள தாண்டி அவங்கள தொடுங்கடா பார்ப்போம்“; ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்த ட்ரம்ப்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
Embed widget