Ningappa Genannavar: ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் ! சொந்த வீடு கூட இல்லை! - நிங்கப்பாவின் மறுபக்கம்!
பெண்கள் மல்யுத்தத்தின் முன்னோடியாக இருந்த காமினி யாதவ்தான் நிங்கப்பாவின் கோச் என கூறப்படுகிறது.
மல்யுத்த தங்கம் :
கடந்த வியாழக்கிழமை அன்று, கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்த 17 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த நிங்கப்பா ஜெனன்னவர் தங்கப்பதக்கம் பெற்றார். இது கர்நாடகாவை உலகறிய செய்வதாக இருந்தது.போட்டியில் 45 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஈரானின் அமீர்முகமது சலேவை நிங்கப்பா தோற்கடித்தார். ஜூனியர் கான்டினென்டல் நிகழ்வில் இந்தியாவின் டாப்-ஆஃப்-தி-டேபிள் ஃபினிஷுக்கு அவரது பதக்கம் பங்களித்தது, மேலும் ஹரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் உள்ள பாரம்பரிய ஹாட்பெட்களின் நிழலில் இருக்கும் ஒரு மல்யுத்த மையம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இதில் மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால் பெண்கள் மல்யுத்தத்தின் முன்னோடியாக இருந்த காமினி யாதவ்தான் நிங்கப்பாவின் கோச் என கூறப்படுகிறது. அவர் இறுதிப்போட்டிக்குள் நுழையும் பொழுது யாமினியிடம் ஆசி பெற்றுக்கொண்டு சென்றாராம்.
Women coaches in men's wrestling are very rare in 🇮🇳. Ningappa of Karnataka who won selection trials for Asian U17 championships though is coached by fmr Commonwealth🥈 Kamini Yadav who was a pioneer of 🇮🇳 women's wrestling. After the final he went to get her blessings. pic.twitter.com/ZLxpzrsgzV
— jonathan selvaraj (@jon_selvaraj) May 18, 2022
நிங்கப்பா ஜென்னவர் :
நிங்கப்பாவின் பெற்றோர்கள் ஒரு தினக்கூலி . சொந்த ஊர் முதோல் ஹவுண்ட் . முதோலின் வளமான மல்யுத்த கலாச்சாரத்தைப் பற்றி பேசுகையில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) மல்யுத்த பயிற்சியாளர் ராம் புடாகி, “ இது நாய்களுக்கு பெயர் போன பிரபலமான ஊர் , இனிமேல் மல்யுத்ததிற்கு பெயர் போன ஊராக இருக்கும்“ என்றார். அந்த ஊரின் மல்யுத்த பயிற்சியாளர் கூறுகையில் “ இந்த ஊரில் எல்லோர் வீட்டிலும் மல்யுத்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் நிங்கப்பாவிற்குதான் வீடு இல்லை “ என்றார். இந்த வார்த்தையின் மூலம் அந்த இளம் சாதனையாளர் கடந்து வந்த பாதை அத்தனை எளிமையானதாக இருக்க முடியாது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
Ningappa Genannavar of Karnataka just bagged gold in freestyle wrestling in Asian Under-17 Championship
— Amit Mishra (@MishiAmit) June 25, 2022
His life hasn’t been easy being son of a daily wager, can anyone share his details so that we can help this talented little child? pic.twitter.com/uSxjPocOFO
வீட்டுக்கொரு வீரர்கள் !
முதோல் ஒரு சிறிய கிராமம். கிருஷ்ணா நதி இந்த ஊர் வழியாக பாய்கிறது, பெரும்பாலான மக்கள் இங்கு விவசாயத்தை நம்பிதான் இருக்கின்றனர்,இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த ஊரில் , ஒவ்வொரு வீட்டிலும் இளம் மல்யுத்த வீரர்களை நாம் பார்க்க முடியும் . என்கிறார் கர்நாடக மல்யுத்த சம்மேளனத்தின் செயலாளர் என் ஆர் நரசிம்மா.வட மாநிலங்களைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள் தேசிய அணியில் இடம்பிடிப்பதும் பதக்கங்களை வெல்வதுமே கேட்டுப்பழகிய நமக்கு கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய முதோல் போன்ற கிராமங்கள் இந்த நிலையை மாற்ற போராடிக்கொண்டிருப்பதை எத்தனை பெருமையுடன் பார்க்க வேண்டும்