பதக்கங்களை குவித்தும் அங்கீகாரமில்லை... மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உதவுவாரா துணை முதல்வர்?
Udhayanidhi Stalin :விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இந்த குழந்தைகளுடைய வேதனையை தெரிய வைக்கிறோம் நிச்சயம் அவர் உதவி செய்வார் என்று நம்புகிறோம்.

கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோருக்கான போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு முறையான அங்கீகாரம் வழங்கவில்லை என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்தித்தனர்
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களின் சார்பாக அவர்களின் பெற்றோர்களின் ஒருவரான நிஷா கூறுகையில்,
இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இல்லை. இவர்களுக்கான விளையாட்டு துறை என்பது உலக அளவில் காதுகேளாதோருக்கான விளையாட்டு துறை என்று உள்ளது.தமிழ்நாட்டிலேயே அசோசியேஷனும் உள்ளது. இவர்கள் மூலமாகத்தான் ஒலிம்பிக் வரையில் சென்றார்கள். அதற்கான அங்கீகாரம் மற்ற குழந்தைகளுக்கு கிடைத்தது போல் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை. தற்போது டென்த் ஏசியன் பசிபிக் கேம்ஸ் க்கு சென்றனர். 12 குழந்தைகள் சென்றனர். அதில் 12 குழந்தைகளும் வெற்றி பெற்றனர்.
அங்கீகாரம் கிடைக்கவில்லை:
பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் சலுகைகள், இந்த குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை குழந்தைகள் மிகவும் குழம்பி கிடைக்கின்றனர். பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு அரசு அனைத்தையும் செய்து கொடுக்கும் ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை. போட்டிக்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தைவானிற்கு 5 குழந்தைகள் சென்றார்கள். அதில் சென்ற ஐந்து குழந்தைகளும் வெற்றி பெற்றனர். ஆனாலும் முறையான அங்கீகாரம் வழங்கவில்லை. எந்தவித உதவித் தொகையும் வழங்கப்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் 1ஆம்தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோருக்கான போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பன்னிரண்டு மாணவர்களில் 11 மாணவர்கள் இங்கே உள்ளனர். இதில் நமது தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ஐந்து பதக்கங்களை வென்றார்.இந்தியாவிலேயே ஒரே பெண் இவ்வளவு பதக்கங்களை வென்றார்.
அசோசியேஷன் உதவி:
அசோசியேஷன் எங்களுக்கு உதவியாக இருந்தனர். ஆனால் இந்த குழந்தைகளாகவே விமான நிலையத்திற்கு சென்றனர். இவர்களாகவே திரும்பவும் வந்தனர். அங்கே சென்ற 12 குழந்தைகளும் அரசாங்க வேலை செய்யும் பெற்றோர்களை உடைய குழந்தைகள் கிடையாது. எட்டு பேர் விவசாய குடும்பத்தை சார்ந்த குழந்தைகள், இரண்டு குழந்தைகள் ஹோட்டலில் வேலை செய்கின்றனர், ஒரு குழந்தை எந்த வித உதவியும் கிடைக்கப்பெறாத குழந்தையாக உள்ளது. திறமைகளை நம்பி மகிழ்ச்சியாக வந்தனர்.ஆனால் எந்தவித அங்கீகாரம் கிடைக்காமல் போனதால் குழந்தைகள் அழுதனர்.
இதையும் படிங்க: ஒரே ஃபோன் கால்.. பஞ்சாப் டிஎஸ்பியை அலறவிட்ட Deputy CM .. அதிரடி காட்டிய உதயநிதி
அரசு சார்பாக 20000 ரூபாய் பயண செலவிற்கு வழங்கப்பட்டது. மற்ற குழந்தைகளுக்கு கிடைத்த பாராட்டையும் ஊக்கத்தொகையையும் பார்த்து இந்த குழந்தைகள் நொந்ததாகவும். சைகை மொழியையும் தெரிந்து வாய் பேச முடியும் குழந்தையாக இருந்தால் மட்டுமே இதை தெரிவிக்க முடியும். இந்த குழந்தைகளுக்காக தான் நான் இருக்கிறேன். எங்களையே ஏன் இப்படி உதாசீனப்படுத்துகிறார்கள் என்பது எங்கள் குழந்தைகளின் மனக்குமுறல்
உதயநிதியிடம் வேண்டுகோள்:
எங்களை அழைத்து ஏன் வாழ்த்தவில்லை. இது தான் எங்களது கண்ணீர். இந்தியாவோ தமிழ்நாடோ ஏன் எங்களை பாராட்டவில்லை. பயிற்சியாளரும் இன்றி நாங்களாகவே கற்றுக்கொண்டு இருக்கிறோம். விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இந்த குழந்தைகளுடைய வேதனையை தெரிய வைக்கிறோம் நிச்சயம் அவர் உதவி செய்வார் என்று நம்புகிறோம். இந்த சீருடையை போட்டு ஒரு யாசகர் போல தெருவில் நிற்கிறோம் என குழந்தைகள் சொல்கின்றனர்.
துணைமுதல்வர் உதயநிதி பார்க்க நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைத்திருக்கின்றோம் என்று எங்கள் அசோசியேஷன் தலைவர் கூறினார் ஆனால் நிச்சயம் இதை அவரிடம் தெரியப்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை தெரிந்திருந்தால் அழைத்து இருப்பார் என்று நம்புகிறோம் என்று கூறினார். 4 தங்கம் 6 வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். பதக்கங்களை வென்று இந்தியா திரும்பி பின் துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்துக் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

