மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

வடக்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி கோஸ்ட் 2002ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு பிரச்னை தீவிரமாக இருந்தது. அங்கு இருந்த கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பெரியளவில் போர் இருந்தது வந்தது.

உலகில் அதிக மக்களால் பின் தொடரப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்து விளையாட்டு தான். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாக உள்ளனர். எப்போதும் விளையாட்டு மூலம் ஒரு சமூக பிரச்னையை கொண்டு சென்றால் எளிதில் நிறைய மக்களை சென்று அடையும். அப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது  சில நாட்களுக்கு முன்பு போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை தள்ளிவைத்தார். அத்துடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து தன் பக்கத்தில் வைத்தார். அவரின் இந்தச் செயல் சமூகத்தில் மட்டுமல்லாமல் பங்குச்சந்தையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவரின் இந்தச் செயலுக்கு பிறகு பங்குச்சந்தையில் கோகோ கோலாவின் பங்குகளின் மதிப்பு 29 ஆயிரம் கோடி வரை குறைந்தது. இது பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் கால்பந்து வீரர் ஒருவர் சமூக பிரச்னையை கையில் எடுப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த டிடியர் ட்ரோக்பாவின் செயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

வடக்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி கோஸ்ட் 2002ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு பிரச்னை தீவிரமாக இருந்தது. அங்கு இருந்த கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பெரியளவில் போர் இருந்தது வந்தது. தினமும் துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிகமாக நடைபெற்று வந்தது. 2004ஆம் ஆண்டு வரை நீடித்த அந்தச் சண்டை பின்னர் வடக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும் தெற்கு பகுதியை அரசும் தனது கட்டுப்பாட்டிற்கு வைத்திருந்தன. 2005ஆம் ஆண்டு மீண்டும் இருவருக்கும் இடையே போர் ஏற்படும் நிலை உருவானது. அந்த சமயத்தில் ட்ரோக்பாவின் செயல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு ஆகிய இருவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

2004ஆம் ஆண்டு இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் செல்சி அணிக்காக விளையாடும் வாய்ப்பை ட்ரோக்பா பெற்றார். அப்போது முதல் ஐவரி கோஸ்ட் மட்டுமல்லாமல் உலக கால்பந்து வரலாற்றில் மிகவும் பிரபலம் அடைந்தார். 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பாக விளையாடி இருந்த ஐவரி கோஸ்ட் அணி 2 இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. இதனால் உலகக் கோப்பைக்கு முன்னேற கேமரூன் மற்றும் எகிப்து இடையேயான போட்டி டிராவில் முடிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

ஐவரி கோஸ்ட் அணியின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அப்போட்டி டிராவில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு ஐவரி கோஸ்ட் முன்னேறியது. இந்த தருணத்தின் போது தன்னுடைய சக வீரர்களுடன் இருந்து பேசிய ட்ரோக்பா, “ஐவரி கோஸ்ட் நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்களே, நம் நாட்டின் வடக்கு,கிழக்கு,தெற்கு, மத்திய ஆகிய அனைத்து பகுதிகள் மக்களும் ஒன்று சேர்ந்து விளையாடி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தகுதிப் பெற முடியும் என்பதை இன்று நாம் நிரூபித்துள்ளோம். இந்த கொண்டாட்டம் நம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே உங்களுடைய கால்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆயுதங்களை கைவிடுங்கள். நல்ல வலம் கொண்ட நமது நாடு போரில் சிக்கி தவிக்காமல் ஆயுதங்களை கைவிட்டு தேர்தலை நடத்துங்கள் ” எனக் கூறி கால்களில் விழும் போல வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது அப்போது நடைபெற்ற கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுக்கும் இடையேயான சண்டையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

அவர் இத்துடன் நிற்கவில்லை. 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஐவரி கோஸ்ட் 4 தோல்விகளுடன் முதல் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் அந்த அணியின் செயல்பாட்டை நாடு முழுவதும் கொண்டாடியது. மீண்டும் இந்த பிரச்னையை கையில் எடுத்த ட்ரோக்பா 2007ஆம் ஆண்டு மடகாஸ்கர் அணியுடன் நடைபெற இருந்த நட்பு ரீதியிலான போட்டியை வடக்கு பகுதியில் வைக்க வேண்டும் என்று கூறினார். ஐவரி கோஸ்ட் நாட்டின் வடக்குப் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கு சென்று விளையாட வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். 

பின்னர் ராணுவ பாதுகாப்புடன் அங்கு சென்ற ஐவரி கோஸ்ட் கால்பந்து அணி 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. இந்தப் போட்டி முழுவதும் ட்ரோக்பா அவ்வப்போது ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று உணர்த்தி கொண்டே இருந்தார். இது அந்த நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தன்னுடைய கோரிக்கையின் மூலம் முழுமையாக போரை நிறுத்தவில்லை என்றாலும் அதில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 

‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

இது போன்ற சம்பவங்கள் மூலம் கால்பந்து வீரர்கள் சிலர் அதை விளையாட்டாக மட்டும் பார்க்காமல் சமூக பிரச்னைகளை முன்னெடுக்கும் நல்ல கருவியாக பார்க்கின்றனர் என்பது தெரிகிறது. 2018ஆம் ஆண்டு உடன் ட்ரோக்பா கால்பந்து விளையாட்டில் ஓய்வு பெற்று இருந்தாலும் அவருடைய செயல் எப்போதும் மக்கள் மனதில் நின்று கொண்டு வருகிறது. 

மேலும் படிக்க: ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget