மேலும் அறிய

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

செய்தியாளர் சந்திப்பின் போது கோகோ கோலாவை தூக்கி  ரொனால்டோ ஓரம்  வைத்ததால் அந்நிறுவனம்  ரூ.29,337 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

விளையாட்டு வீரர்களில் மிகவும் கட்டுப்பாடான உணவு பழக்கங்களை கொண்டவர் ரொனால்டோ. அதுவே இந்த வயதிலும் அவர் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நொறுக்கு தீனிகள் எதுவுமே ரொனால்டோ எடுத்து கொள்ளமாட்டார். ஒரு முறை இது குறித்து பேசிய ரொனால்டோ "நான் என் மகனிடம் உணவு விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வேன், சில நேரங்களில் அவர் கோகோ கோலா மற்றும் ஃபாண்டாவை குடிப்பார், மொறுமொறுப்பான பண்டங்களை சாப்பிடுவார், எனக்கு அது பிடிக்காது என்று அவருக்குத் தெரியும்" என தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு குளிர்பானங்களை தவிர்க்கும் ரொனால்டோ, கோகோ கோலா பாட்டிலை நகர்த்தி வைத்து நேற்று வைரலானார்.

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையில் ஹங்கேரி அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் தனது ஆட்டத்தை தொடங்கியது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணி புடாபெஸ்டில் உள்ள ஃபெரெங்க் புஸ்காஸ் மைதானத்தில் ஹங்கேரியை எதிர்கொண்டது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்புக்கு வந்து அமர்ந்தபோது, கோகோ கோலாவின் இரண்டு பாட்டில்கள் ரொனால்டோ முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதை  கண்ட ரொனால்டோ அவற்றை எடுத்து மேஜையின் ஓரத்தில் கேமராவில் தெரியாத வண்ணம் வைத்தார். மேலும் அதற்கு பதிலாக ஒரு தண்ணீர் பாட்டிலை அனைவர் முன்னிலையிலும் தூக்கி காண்பித்து ‘தண்ணீர் குடியுங்கள்’ என்றார். இந்த வீடியோ நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் வைரலானது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் ஒருவர் கோகோ கோலாவை தூக்கி ஓரம் வைத்தது சாதாரண நிகழ்வல்ல. அதன் எதிரொலியாக அந்நிறுவனம் ரூ.29,337 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

  மார்க்கா என்ற நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரொனோல்டாவின் செய்தியாளர் சந்திப்புக்கு முன்பும், பின்பும் கோகோ கோலா நிறுவன பங்குகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. இரண்டு பாட்டில்களை நகர்த்தி வைத்த ஒரு சிறிய நிகழ்வு அந்நிறுவத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை இழக்கச் செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. ரொனோல்டாவில் செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு சந்தை மதிப்பு 242 பில்லியன் டாலராக இருந்த கோகோ கோலா, பாட்டிலை ஓரம் வைத்த நிகழ்வுக்கு பின் 238 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது மார்க்கா. செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு ஒரு ஷேர் மதிப்பு 56.10டாலராக இருந்தது. அடுத்த 30 நிமிடத்தில் ஷேரில் சரிவு ஏற்பட்டு 55 டாலருக்கும் கீழ் சென்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கோகோ கோலா நிறுவனம் இதுவரை எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஐசிசி தடைக்கு பயந்து விளையாடாத அஸ்வின்; பாகிஸ்தான் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Embed widget