'எப்பா சூப்பர்மேன் கேட்ச் போல இது..'- வைரலாகும் அலென் கேட்ச் வீடியோ !
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஃபேபியன் அலென் பிடித்த கேட்ச் மிகவும் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5ஆவது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எவின் லூயிஸ் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் விளாசியது. எவின் லூயிஸ் 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உதவியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் என்ற கடின இலக்கு உடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. பிலிப் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழ்ந்து அதிர்ச்சி அளித்தார்.
இதன்பின்னர் கேப்டன் ஃபின்ச் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் அதிரடி காட்டினர். மார்ஷ் 30 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்பு அதிரடி காட்டி வந்த கேப்டன் ஃபின்ச் 10ஆவது ஓவரில் ஹேய்டன் வால்ஷ் பந்தை சிக்சருக்கு விரட்ட முற்பட்டார். அப்போது பந்தை லாங் ஆன் திசையில் ஃபில்டிங் செய்து கொண்டிருந்த ஃபேபியன் அலென் பிடிக்க ஓடி வந்தார். பந்தை தன்னைவிட சற்று தூரமாக இருப்பதை அறிந்த அவர் தன்னுடைய இடது கையை மட்டுமே நீட்டி சிறப்பாக பந்தை பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் பார்ப்பதற்கு மிகவும் அசத்தலாக அமைந்தது.
What a catch from Fabian Allen pic.twitter.com/w5F042PlSe
— William Mitchell (@news_mitchell) July 17, 2021
இந்த கேட்ச் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். அதில் சில
What a Catch taken by Fabian Allen. He is Just Amazing in the field. Incredible one-handed catch of Aaron Finch. #WIvAUS pic.twitter.com/07Zvmcq0Qd
— CricketMAN2 (@man4_cricket) July 17, 2021
Aaron Finch and Moises Henriques built a brilliant
— Raghava (@Raghava4mahesh) July 17, 2021
partnership for the third-wicket partnership by
scoring 49 runs off 31 balls. Fabian Allen catch changed
the entire match, bot of them got out in the 10th over. #WIvAUS
GREATEST CATCH EVER!!! #WIvAUS #FabianAllen pic.twitter.com/seT6TtLFJP
— Static (@PorgeS_) July 17, 2021
அலென் பிடித்த அந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மேலும் படிக்க: "வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும்..."- 40 வயது ஃபிட் தல தோனி வைரல் படம் !