UEFA Euro 202: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: துருக்கி - இத்தாலி மோதல்..!
தள்ளிவைக்கப்பட்ட 16ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, இத்தாலியின் ரோம் நகரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகின்றது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது.
கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பைக்கு பிறகு மிகப் பிரபலமான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த யூரோ கோப்பை கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட போட்டி 16ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, இத்தாலியின் ரோம் நகரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகின்றது. வழக்கமாக ஒன்றிரண்டு நாடுகள் மட்டுமே இணைந்து இந்தத் தொடரை நடத்தும். ஆனால், தற்போது வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க் உள்பட நாடுகளில் நடைபெறுகிறது. 24 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
24 அணிகள் 6 பிரிவுகளான பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் துருக்கி, இத்தாலி, வேல்ஸ் சுவிட்சர்லாந்து, பி பிரிவில் டென்மார்க், பின்லாந்து, பெல்ஜியம், ரஷ்யா, சி பிரிவில் நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா, டி பிரிவில் இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக்குடியரசு, இ பிரிவில் ஸ்பெயின், சுவீடன், போலந்து, சுலோவக்கியா, எஃப் பிரிவில் ஹங்கேரி, போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மொத வேண்டும். லீக் முடிவில் பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3ஆவது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். ரவுண்ட் 16இல் இருந்து 8 அணிகள் காலியிறுதிக்கு செல்லும். முதல் லீக் போட்டியில் துருக்கி - இத்தாலி அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி ஜூலை 11ஆம் தேதி லண்டனில் நடைபெறுகிறது.
Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!
கொரோனாவால் 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 ஆயிரம் ரசிகர்கள் மட்டும்மே போட்டியை நேரில் பார்ப்பார்கள். போட்டியை நேரில் காணும் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
யூரோ கால்பந்து தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் போட்டிக்கட்டணமாக ரூ.82 கோடி கிடைக்கும். லீக் சுற்றில் வெற்றி பெற்றால் 13 கோடியும், டிரா ஆனால் ரூ.6.50 கோடியும் வழங்கப்படும். நாக் சுற்று, காலியிறுதி, அரையிறுதியில் வெற்றி பெறும் அணிக்கும் தொகை கொடுக்கப்படும். கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.89 கோடி வழங்கப்படும். கடைசியாக 2016ஆம் ஆண்டு போர்ச்சுகல் அணி சாம்பியன் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
IND Vs SL: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக தவான் அறிவிப்பு