தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Kabaddi: பஞ்சாப்பில் கபடி போட்டித் தொடரில் கலந்துக்கொண்ட தமிழக வீரங்கணைகள் மீது போட்டி நடுவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கபடி போட்டியில் கலந்துக்கொண்ட தமிழக கபடி வீரங்கணைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கபடி போட்டி:
பல்கலைக்கழகங்களுக்கு இடையே 2024-25 ஆம் ஆண்டிற்கான மகளிர் கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து மகளிர் அணியினர் கபடி தொடரில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் சென்றிருந்தனர்.
இதையும் படிங்க: Virender Sehwag Divorce: மனைவியை விவாகரத்து செய்கிறாரா சேவாக்? அதிரடி மன்னன் வாழ்க்கையில் நடந்தது இதுதான்!
வீராங்கனைகள் மீது தாக்குதல்:
இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பங்கா பல்கலைக்கழகம் இடையே நடந்த போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஃபவுல் செய்யதாக சொல்லப்படுகிறது. இதனால் நடுவரிடம் முறையிட்ட போது அது வாக்குவாதமாக மாறி வீராங்கனைகளை நடுவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன?
அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பங்கா பல்கலைக்கழகம் இடையே நடந்த போட்டியில் தர்பங்கா பல்கலைக்கழக வீராங்கனைகள் ரைடு சென்ற தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மற்ற தமிழக வீராங்கனைக்கள் போட்டி நடுவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து SDAT தலைவர் மேக்நாட் ரெட்டி உடனடியாக மாணவிகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் பாதுக்காப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக மாணவிகள் பாதுக்காப்பாக அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர்.
அழைத்து வரப்பட்ட வீராங்கனைகள் அனைவரும் வரும் ஞாயிறு வரை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் இந்த தாக்குதலில் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து பேச விரும்பவில்லை என்று மேக்நாத் ரெட்டி தெரிவித்திருந்தார்.
பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ#Punjab #kabadi #TNKabaddiplayers #ViralVideo #TNGovt pic.twitter.com/NQmNim0mpG
— ABP Nadu (@abpnadu) January 24, 2025
இந்த நிலையில் பஞ்சாப்பில் உள்ள தமிழக வீராங்கனைகள் அனைவரும் பாதுக்காப்பாக இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதில் உண்மையில்ல என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

