Sreesanth Injury: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு என்னாச்சு..? - மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீசாந்த் குறித்து ஒரு பெரிய செய்தி வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களை கொஞ்சம் வருத்தப்பட செய்துள்ளது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்தவர். இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ஆனால், எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அவர், அதன்பிறகு ரஞ்சி டிராபி 2022 இல் விளையாடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், காயத்தால் ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி
ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத பிறகு, இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ரஞ்சி டிராபி 2022 தொடரில் விளையாடிக்கொண்டிருந்தார். 39 வயதான வேகப்பந்து வீச்சாளர், கேரள அணியில் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம், மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். ஆனால், திரும்பியதும் அவருக்கு காயத்தால் பிரச்சனையாகி விட்டது. காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரே தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவமனையில் இருந்து புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.
— Sreesanth (@sreesanth36) March 1, 2022
அதில், ஸ்ரீசாந்த் படுக்கையில் படுத்திருப்பதை காணலாம். அவர் விரைவில் குணமடைய அவரது நண்பர் பிரார்த்தனை செய்துள்ளார். பயிற்சியின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் நடக்க மிகவும் சிரமப்பட்டார். காயம் காரணமாக அடுத்த போட்டியில் கேரள அணியில் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அணி தனது அடுத்த ரஞ்சி கோப்பை போட்டியில் செளராஷ்டிராவை எதிர்கொள்கிறது.
மேகாலயாவுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சு
ரஞ்சிக் கோப்பையில் கேரள அணிக்கு திரும்பிய ஸ்ரீசாந்த், மேகாலயாவுக்கு எதிரான பந்துவீச்சின் போது, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், 19 ரன்கள் எடுத்தார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளர் 2013 ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் ஊழலில் பெயர் பெற்றதிலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. தடை நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ஸ்ரீசாந்த் ஐபிஎல் மெகா ஏலத்தில் 2022ல் தனது பெயரை பதிவு செய்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 600 வீரர்களின் ஏலத்தில் அவரது பெயரும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ரூ.50 லட்சம் அடிப்படை விலையுடன் இறங்கிய போதிலும், எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. ஏலத்தில் விற்கப்படாத நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஊக்கமளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்