Dutee Chand : ”விளையாட்டு விடுதியில் சீனியர்ஸ் மசாஜ் பண்ண சொல்லுவாங்க....” : ராகிங்கிற்கு ஆளான இந்திய ஒலிம்பிக் வீராங்கனை..
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான டூட்டி சந்த், அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்திய தடகள வீராங்கனை ஒருவர் தன்னுடைய சீனியர் வீராங்கனைகளால் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ராகிங் :
ராகிங் என்பது 10 வருடங்களுக்கு முன்பு இளைஞர்கள் மத்தியில் பெருகிக்கிடந்த ஒரு வியாதியாக இருந்தது. இப்போது சற்று குறைந்தாலும் அந்த சமுதாய சீர்கேடு மெல்ல மெல்ல தலைத்தூக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் கூட ராகிங் கொடுமையால் ஒடிசாவில் 19 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஒலிம்பிக் தடகள் வீராங்கனை டூட்டி சந்த் தானும் விளையாட்டு வீராங்கனைகளால் விடுதியில் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
விளையாட்டு விடுதியில் ராகிங் :
ஒடிசாவில் பிறந்த சந்த், 2006 முதல் 2008 ஆம் காலக்கட்டத்தில் தனது ஆரம்ப நாட்களை விளையாட்டு விடுதியில் கழித்துள்ளார். அப்போது அங்கு தங்கியிருந்த மூத்த விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் உடலை மசாஜ் செய்யவும் மற்றும் அவர்களின் துணிகளை துவைக்கவும் டூட்டி சந்தை வற்புறுத்தியுள்ளனர்.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான டூட்டி சந்த், அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் டூட்டி சந்தைதான் திட்டுவாராம் . அந்த சமயத்தில் தான் எதையுமே செய்ய முடியாதவளாக இருந்தேன் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் உருக்கமாக தெரிவித்திருக்கிறார் டூட்டி சந்த்.
மாணவி தற்கொலை :
சமீபத்தில் ஒடிசா புவனேஸ்வர் பகுதியில் உள்ள பி.ஜே.பி அ்ட்டானமஸ் கல்லூரியில் ராகிங் கொடுமை காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கல்லூரியில் பயின்ற 3 சீனியர் மாணவிகள் விடுதியில் , சம்பந்தப்பட்ட மாணவியை ராகிங் செய்ததாக தெரிீகிறது. இதனால் செய்வதறியாது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி , கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் ஒடிசா பகுதியில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குதான் டூட்டி சந்த் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். டூட்டி சந்தின் இந்த குற்றச்சாட்டிற்கு புவனேஸ்வரில் உள்ள விளையாட்டு விடுதியின் அதிகாரிகள் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
View this post on Instagram