மேலும் அறிய
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
![Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..! Sanjita Chanu CWG champion weightlifter banned for four years for failing dope test Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/845c35e5c0b9619b29f82ceaef874ccc1680623089280224_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சஞ்சிதா சானு
இந்திய முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அப்போது அவர் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சர்ச்சையில் சிக்கியதால், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் நம்பர் மாறியதால் தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அப்போது கூறி அந்த இடைநீக்கத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஊக்கமருந்து குற்றச்சாட்டு 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததால் அவரின் பெயர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் அர்ஜுனா விருதுக்காக டெல்லி ஐகோர்ட்டில் சஞ்சிதா தொடர்ந்த வழக்கில் ‘அர்ஜூனா விருதுக்கு சஞ்சிதாவின் பெயரை விருது கமிட்டி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அந்த தீர்ப்பில் சீல் வைத்த கவரில் முடிவை வைத்து இருக்க வேண்டும். அவர் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுபட்ட பிறகு முடிவை வெளியிட வேண்டும்’ என்று டெல்லி ஐகோர்ட் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதனால் அர்ஜுனா விருதுக்காக டெல்லி ஐகோர்ட்டில் சஞ்சிதா தொடர்ந்த வழக்கில் ‘அர்ஜூனா விருதுக்கு சஞ்சிதாவின் பெயரை விருது கமிட்டி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அந்த தீர்ப்பில் சீல் வைத்த கவரில் முடிவை வைத்து இருக்க வேண்டும். அவர் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுபட்ட பிறகு முடிவை வெளியிட வேண்டும்’ என்று டெல்லி ஐகோர்ட் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு விவகாரம் இவ்வாறு இருந்த நிலையில், ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து சஞ்சிதா சானு முழுமையாக விடுவிக்கப்பட்டதாக பளுதூக்குதல் சம்மேளனம் அதிகாரபூர்வமாக தனது முடிவில் அறிவித்தது. இதனால் மணிப்பூரை சொந்த மாநிலமான சஞ்சிதா ஒரு வழியாக அர்ஜூனா விருதைப் பெற்றார்.
இந்நிலையில் இவரது ஊக்கமருந்து முடிவில் தீர்ப்பு மீண்டும் சஞ்சிதாவுக்கு எதிராக வந்துள்ளது. இதனால் இந்திய முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். இது தற்போது திரும்பப் பெறப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், அவருக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதும் திரும்பப் பெறப்படும் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion