தவெக பொதுக்குழு கூட்டம் - 17 தீர்மானங்கள் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் உரிமைகமைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதா ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அதுவே ஒரே தீர்வாக இருக்கும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை..
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது, இருமொழிக் கொள்கையில் உறுதி, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை,மாநில அரசுக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சரியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகிய கொள்கைத் தலைவகள் வழியில் பயணிப்போம்.
டாஸ்மாக் முறைகேடு விசாரணை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, அரசு ஊழியர்கள், ஆசியர்கள் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவு, சென்னை ECR பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டும்.
சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.