Rafael Nadal:டென்னிஸ் உலகை கட்டி ஆண்ட வேட்டையன்; ரஃபேல் நடாலின் சிறந்த ஐந்து கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிகள்!
டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்பெயின் ஜாம்பவான் ரஃபேல் நடால் இன்று அறிவித்துள்ளார். இவரின் ஐந்து சிறந்த கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகள் தொடர்பான தகவலை பார்ப்போம்:

தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்பெயின் ஜாம்பவான் ரஃபேல் நடால் இன்று அறிவித்துள்ளார். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் டென்னிஸ் உலகை கட்டி ஆண்ட வேட்டையன் ரஃபேல் நடால். இவரின் ஐந்து சிறந்த கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகள் தொடர்பான தகவலை பார்ப்போம்:
2005 பிரெஞ்சு ஓபன்:
நடால் 18 வயதான இடது கை ஆட்டக்காரராக, ஒரு பெரிய டாப்-ஸ்பின் ஃபோர்ஹேண்ட் எதிர்பார்ப்புடன் வந்தவர்.மான்டே கார்லோ, பார்சிலோனா மற்றும் ரோம் ஆகிய மூன்று கோர்ட் லீட்-அப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். அப்போது அவர் ஸ்லீவ்லெஸ் சட்டை அணிந்து விளையாடியது டென்னிஸ் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த போட்டியின் போது ரிச்சர்ட் காஸ்கெட், செபாஸ்டின் க்ரோஸ்ஜின் மற்றும் டேவிட் ஃபெரர் ஆகியோரை டிரா மூலம் வெளியேற்றினார். ஆனால் இறுதிபோட்டி உலகின் நம்பர் ஒன் வீரர் பெடரருக்கு எதிராக வந்தது. நடாலின் 19வது பிறந்தநாள் அன்று அவர் 6-3, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்
2008 விம்பிள்டன்:
நடால் 6-4, 6-4, 6-7 (7/5), 6-7 (10/8), 9-7 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தினார்.
எல்லா காலத்திலும் மிகப் பெரிய டென்னிஸ் போட்டிகளில் ஒன்றாகப் பரவலாக நினைவுகூரப்படும் ஒரு போட்டி, நம்பமுடியாத நான்கு மணி நேரம், 48 நிமிட அதிரடிக்குப் பிறகு நடாலிடம் சென்றது. மதியம் 2 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டது, மழையின் காரணமாக இறுதிப் போட்டி தாமதமாகத் தொடங்கியது, மேலும் இரண்டு முறை மழையால் தாமதங்கள் ஏற்பட்டன. இருந்தாலும் போட்டி ஆரம்பம் ஆனது. இரவு 9:21 மணிக்கு நடால் வெற்றியை சுவைத்தார். இது அவரது முதல் விம்பிள்டன் வெற்றி.
2009 ஆஸ்திரேலிய ஓபன்:
நடால் 7-5, 3-6, 7-6 (7/3), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தினார்.
நடால் மீண்டும் ஃபெடரருக்கு எதிராக முதலிடம் பிடித்தார், இந்த முறை ஐந்து செட், நான்கரை மணி நேர த்ரில்லாக இருந்தது. இந்த போட்டியின் வெற்றியின் மூலம் நடால் தனது முதல் ஆஸ்திரேலிய ஓபனைப் பெற்றார்.
2012 ஆஸ்திரேலிய ஓபன்:
நடால் 5-7, 6-4, 6-2, 6-7 (5/7), 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சிடம் தோற்றார்.
நடாலின் நான்கு ஆஸ்திரேலிய ஓபன் இறுதி தோல்விகளில் ஒன்று, ஆனால் இது என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும் ஒரு போட்டியாக அமைந்தது. உலகின் நம்பர் ஒன் ஜோகோவிச் மற்றும் இரண்டாவது தரவரிசையில் உள்ள நடால் இடையே ஐந்து மணி நேரம் 53 நிமிடம் போட்டி நடைபெற்றது. இறுதியாக உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:37 மணிக்கு முடிவடைந்தபோது - வரலாற்றில் மிக நீளமான கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி - இரு வீரர்களும் ஏறக்குறைய சக்தி இல்லாமல் கிழே விழும் அளவிற்கு விளையாடினார்கள். இந்த ஜோடி இரவு முழுவதும் மிருகத்தனமாக விளையாடியது. 31-ஷாட் முடிவில் ஜோகோவிச் வீழ்ந்தார் மற்றும் நடால் பக்கவாட்டில் வீழ்ந்தார். "இது மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று நடால் கூறினார். "நான் தோற்றதால் அல்ல, இல்லை, நாங்கள் விளையாடிய விதத்தினால்." என்றார். கோப்பை வழங்கலின் போது, இரு வீரர்களும் முற்றிலும் சோர்ந்து காணப்பட்டதன் மூலம் இது வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்பதை அறிய முடியும்.
2013 யுஎஸ் ஓபன்:
நடால், ஜோகோவிச் 6-2, 3-6, 6-4, 6-1
2012 யுஎஸ் ஓபன் மற்றும் 2013 ஆஸ்திரேலிய ஓபனைத் தவறவிட்டதால், நடால் ஏழு மாதம் ஓய்வில் இருந்தார். ஆனால் அவர் திரும்பியவுடன் டென்னிஸ் உலகை புயலில் கிளம்பியது. 64 போட்டிகளில் 60ல் வென்றார். அவற்றில் இரண்டு கிராண்ட்ஸ்லாம்கள் (பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன்) மற்றும் ஜோகோவிச்சை எதிர்த்து ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தார்.
ரஃபேல் நடால் தனது வாழ்க்கையில் மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் (2009, 2022)
- பிரெஞ்சு ஓபன் (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022)
- விம்பிள்டன் (2008, 2010)
- யுஎஸ் ஓபன் (2010, 2013, 2017, 2019)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

