மேலும் அறிய

விளையாட்டு விடுதியில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ..!

தமிழக அரசின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்குத் தங்குமிடம், சத்தான உணவு மற்றும் சர்வதேச தரத்திலான அறிவியல் சார்ந்த விளையாட்டுப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

வயது வரம்பு மற்றும் தகுதி விவரங்கள்

இந்த சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்புவோர் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின்னரோ, அல்லது 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

கல்வி மற்றும் விளையாட்டுத் தகுதிகள்

* இளநிலை பட்டப்படிப்பு: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 2026-27 கல்வியாண்டில் கல்லூரிகளில் சேரவுள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்குச் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* முதுநிலை பட்டப்படிப்பு: முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின் போது சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

*இணையதள முகவரி: www.sdat.tn.gov.in

* கடைசி நாள்: மார்ச் 26, 2026 அன்று மாலை 5.00 மணி வரை.

*கூடுதல் விவரங்களுக்கு: 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மைய அலைப்பேசி எண்: 9514000777 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள்

விண்ணப்பித்த மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வுகள் 30.03.2026 அன்று காலை 7.00 மணியளவில் சென்னையில் உள்ள இரண்டு முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

தடகளம், பளுதூக்குதல், ஜூடோ, வாள்விளையாட்டு, கையுந்துபந்து  ஆண் மற்றும் பெண்  ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை 

கால்பந்து  ஆண் மட்டும் -  ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை.

ஹாக்கி, கபாடி ஆண் மற்றும் பெண்  மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னை.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள அறிக்கையில்,

"மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன அறிவியல் சார்ந்த பயிற்சிகளைப் பெற்று, மாநில மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் உரிய காலத்திற்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," எனத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குத் தமிழக அரசின் இந்தச் சிறப்பு விடுதித் திட்டம் ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
Embed widget