Pro Kabaddi 2023: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்... அசத்தல் வெற்றி!
Tamil Thalaivas vs Telugu Titans: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் அணி.

புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கேப்பையை கைப்பற்றும் நோக்கில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதன்படி, இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும் மோதின.
தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் :
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் 38-48 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
அந்த தோல்விக்குப் பிறகு இன்று விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் விளையாடியது.
மறுபுறம், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் உ.பி யோதாஸ் அணியை எதிர்கொண்டதெலுங்கு டைட்டன்ஸ் அணி, 33-48 என்ற கணக்கில் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தான் விளையாடியது.
தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் நேருக்கு நேர்:
புரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் 12 முறை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கெதிரான 6 வெற்றிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் உள்ளது. இந்த மோதலில் தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வென்றுள்ளது, ஒரு போட்டி டையில் முடிந்தது.
இந்நிலையில், தான் இன்று நடைபெற்ற போட்டியில் 38-36 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதன்படி, தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்திர கோசியார் 7 ரைய்டு, 1 Tackle , 2 Bouns என மொத்தம் 10 புள்ளிகள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தமிழ் தலைவாஸ்:
Raid points: 21
Super raids : 0
Tackle points: 12
All out points: 4
Extra points: 1
தெலுங்கு டைட்டன்ஸ்:
Raid points: 23
Super raids : 0
Tackle points: 12
All out points: 0
Extra points: 1
மேலும் படிக்க: Rinku Singh: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டி... மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்! விவரம் உள்ளே!
மேலும் படிக்க:Arjuna Award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முகமது ஷமி? வெளியான முக்கிய தகவல்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

